தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் 115 ரவுடிகள் சிறையில் அடைப்பு.
தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடவே முடியாது – காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கருநாடகா மீண்டும் மறுப்பு.
கிருஷ்ணகிரி புதுப்பேட்டையில் 700 ஆண்டுகள் பழைமை வாய்ந்த நவநீத வேணு கோபாலசாமி சிலை புனரமைப்பின் போது உடைந்தது.
கோயில் பிசினஸ்: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் சிறப்பு தரிசனம் பெற்றுத் தருவதாகக் கூறி பக்தர்களிடம் பணம் வசூலித்த ஆசாமி கைது.
மாவட்ட நீதிமன்றங்களில் நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதை 61 ஆக உயர்த்த பரிசீலனை செய்ய மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.
