தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் மொத்தம் 18 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது. இதேபோன்று நாடு முழுவதும் சுமார் 5 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தேசிய நீதித்துறை தரவு அமைப்பு தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மகாராட்டிராவில் 61.79 லட்சம் வழக்குகளும், குறைந்தபட்சமாக ஜம்மு – காஷ்மீரில் 1,757 வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
16 ஆண்டுகளுக்கு பிறகு
இந்தியா திரும்பும் லலித் மோடி
அய்பிஎல் நிதி மோசடி வழக்கில் குற்றம் சாட்டப் பட்ட லலித் மோடி 16 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா திரும்ப உள்ளதாக காட்சிப் பதிவு மூலம் தெரிவித்துள்ளார். தீர்ப்பாயம் தனக்குச் சாதகமாக தீர்ப்பளித்ததில் மகிழ்ச்சியடைகிறேன். 16 ஆண்டுகால போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது என்றார். அக்டோபரில் தன் மகளுக்கு குழந்தை பிறக்க உள்ளது. எனவே அனேகமாக 2026 இறுதியிலோ, 2027 தொடக்கத்திலோ இந்தியா திரும்புவேன் எனவும் கூறினார்.
