அய்யப்பனை நம்ப வேண்டாமோ! சபரிமலைக்குச் செல்பவர்கள் காட்டு வழிப் பயணத்தை தவிர்க்க அறிவுறுத்தல்!

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

திருவனந்தபுரம், டிச.10 கேரள உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், சபரிமலையில் விதிக்கப்பட் டுள்ள கட்டுப்பாடுகள் தீவிரப்படுத் தப்பட்டுள்ளது. இந்நிலையில், சன்னிதானத்தில் நேற்று (டிசம்பர் 8, 2025) கூடுதல் மாவட்ட ஆட்சியர் அருண் தலைமையில் உயர் அதிகாரி களின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்குப் பிறகு கூடுதல் மாவட்ட ஆட்சியர் அருண் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சபரிமலைக்கு வரும் பெண்கள், குழந்தைகள், நோயாளிகள் மற்றும் வயதானவர்கள் பாரம்பரியமான காட்டு வழிப் பயணத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.  “அவர்கள் அனைவரும் நிலக்கல்  பம்பை வழியாக சபரிமலைக்கு வருவது பாதுகாப்பானது. யானை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் இந்த வனப் பகுதிகளில் அதிக அளவில் இருப்பதால், பாதுகாப்புக் கருதி இந்த எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இந்த வழிகளில் வனத்துறை மற்றும் தீயணைப்பு மீட்புப் படையினர் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போதிலும், பக்தர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்று அவர் மேலும் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *