தஞ்சையில், கல்வி வள்ளல் காமராசர் 124ஆவது பிறந்தநாள் விழா காமராசர் சிலைக்கு கழகப் பொதுச் செயலாளர் மாலை அணிவிப்பு

தஞ்சை, ஜூலை 23 தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் இராஜாஜி மூடிய பள்ளிகளை திறந்து வைத்தவருமான கல்வி கண் திறந்த காமராஜரின் 124ஆவது பிறந்தநாளை (15.7.2026) முன்னிட்டு தஞ்சாவூர் மாநகர கழகத்தின் சார்பில் தஞ்சை கீழவாசல் காமராஜர் சிலைக்கு கழக பொதுச்செயலாளர் முனைவர் வீ.அன்புராஜ் தலைமையில் காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில் தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் மாவட்டக் காப்பாளர் மு. அய்யனார், மாநில ஒருங்கிணைப்பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன், மாநில பகுத்தறிவு ஊடகப் பிரிவு தலைவர் மா.அழகிரிசாமி, மாவட்டத் துணைத் தலைவர் பா.நரேந்திரன், மாநில மாணவர் கழகச் செயலாளர் இரா.செந்தூரபாண்டியன், கழக சொற்பொழிவாளர் இரா. பெரியார் செல்வன், மாவட்ட இளைஞரணித் தலைவர் ஆ.பிரகாஷ், மாநகரத் தலைவர் செ.தமிழ்செல்வன், மாநகர செயலாளர் இரா.வீரக்குமார், மாநகர துணைத்தலைவர் அ. டேவிட், மாவட்ட ப.க.துனைத் தலைவர் ஜெ.பெரியார் கண்ணன், தஞ்சை தெற்கு ஒன்றியச் செயலாளர் அ.ராமலிங்கம், தஞ்சை ஒன்றிய ப.க.தலைவர் சோ.இராமகிருஷ்ணன், மாவட்ட தொழிலாளரணித் தலைவர் ச. சந்துரு, தஞ்சை மாநகர இளைஞரணி துணைத் தலைவர் அ.பெரியார் செல்வம், விடுதலை வாசகர் வட்ட உறுப்பினர் அ.குழந்தைசாமி, தஞ்சை மாநகரத் துணைச் செயலாளர் இரா.இளவரசன், புதிய பேருந்து நிலைய பகுதி செயலாளர் துரை, புதிய பேருந்து நிலைய பகுதித் தலைவர் சாமி. கலைச்செல்வன், அண்ணா நகர் பகுதி தலைவர் சூரியமூர்த்தி, கரந்தை பகுதி செயலாளர் தனபால் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *