மகள்களின்
ஆடைகளையே கிழிப்பீர்களா?
ஆடைகளையே கிழிப்பீர்களா?
‘‘உங்கள் மகள்களின் ஆடைகளையே கிழிப்பீர்களா’’ என மக்களவையில் அகிலேஷ் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார். டில்லியில் மாணவர்கள் தாக்கப்பட்டது குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். அப்போது பேசிய அகிலேஷ், ‘‘நீங்கள் அந்த மாணவர்களிடம் பேச விரும்பியிருந்தால், ஏன் அதை முன்னரே செய்யவில்லை? மாணவர்கள் மீது தடியடி நடத்த உங்களுக்கு எப்படி துணிவு வந்தது?’’ என சாடினார்.
காயமடைந்த மாணவர்களைப் பார்க்கச் சென்றவர்களைத் தடுப்பதா?
புதுடில்லி, ஜூலை 23 டில்லியில் காவல் துறையினர் தாக்குதலில் காயமடைந்த மாணவர்களை மருத்துவ மனையில் சந்திக்க ஒன்றிய அரசு அனுமதி மறுப்பதாக தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவு, முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி டில்லியில் போராடிய மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதில், பலர் காயமடைந்தனர்.
டில்லி ராம்மனோகர் லோகியா மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, தயாநிதி மாறன், ஜெகத்ரட்சகன், கிரிராஜன், கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் சந்திக்க சென்றனர்.ஒன்றிய அரசின் நிர்பந்தத் தால் மாணவர்களை சந்திக்க காவல்துறை அனும திக்கவில்லை. இதையடுத்து, மாணவர்களின் உறவினர்களிடம் நலம் விசாரித்தனர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க. கொறடா ஆ.ராசா,தி.மு.க. தலைவரின் அறிவுறுத்தலின் பேரில் மாணவர்களின் நலன் குறித்து விசாரிக்க சென்றோம், ஆனால், தங்களை அனுமதிக்க வில்லை என்றார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்க்க கூட அனுமதிக்காத ஒன்றிய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
