உலகில் அதிகம் பேசப்படும் மொழி
எது தெரியுமா?
எது தெரியுமா?
உலகில் ஒட்டுமொத்தமாக அதிக மக்களால் பேசப்படும் மொழிகளின் பட்டியலில் ஆங்கிலம் முதலிடத்தில் உள்ளது. உலகளாவிய வணிகம் மற்றும் தகவல் தொடர்புக்கு ஆங்கிலம் முதன்மையாக பயன்படுத்தப்படும் வேளையில், சீன நாட்டின் ‘மாண்டரின்’ மொழி இரண்டாவது இடத்தை பிடிக்கிறது. உலக மக்கள் தொகையில் சுமார் 1.5 பில்லியனுக்கும் அதிகமானோர் ஆங்கிலத்தை தங்களின் முதல் அல்லது இரண்டாம் மொழியாக பயன்படுத்தி வருகின்றனர்.
சொல்வது பிஜேபி எம்.பி.
அயோத்தி ராமன் கோயில் நன்கொடைகளில் திருட்டு முறைகேடுகள் நடந்தது மட்டுமல்லாமல் லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கையும் திருடப்பட்டு விட்டது என்று சொல்கிறார் இமாச்சலப் பிரதேச பிஜேபி எம்பி கங்கனா ரனாவத்.
ஒரு தகவல்
பழைய மூர் மார்க்கெட் 1898 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி தலைவராக இருந்த சர் ஜார்ஜ் மூர் என்பவரால் அடிக்கல் நாட்டப்பட்டு 1900 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது அந்த இடத்தில் தான் தற்பொழுது சென்னை புறநகர் ரயில் நிலையம் செயல்படுகிறது.
பீட்டர் அல்போன்ஸ் குற்றச்சாட்டு
தொழில் அதிபர் அணில் அம்பானி ரூபாய் நாற்பதாயிரம் கோடியை திருப்பி செலுத்தாத நிலையில் பிரதமர் மோடி அவரை தன்னுடன் பிரான்சுக்கு விமானத்தில் அழைத்துச் செல்கிறார் அமெரிக்காவில் அதானிக்கு ரூபாய் 2400 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
