இரண்டாவது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்

புதுடில்லி, ஜூலை 22 நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் 20.7.2026 அன்று தொடங்கியது. அப்போது நீட் தேர்வு முறைகேடு, அயோத்தி ராமன் கோயில் நன்கொடை திருட்டு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்க ட்சிகள் எழுப்பின. இதன் காரணமாக முதல் நாளில் நாடாளுமன்றம் முழுமையாக முடங்கியது.

இரண்டாவது நாளான நேற்று (21.7.2026) காலை 11 மணிக்கு மக்களவை கூடியது. அப்போது நீட் தேர்வு முறைகேடு, சிஜேபி பேரணியில் நடத்தப்பட்ட தடியடி குறித்து எதிர்க் கட்சிகள்கேள்வி எழுப்பி தொடர் அமளியில் ஈடுபட்டன. மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கூறும் போது, ‘‘அவையில் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கலாம். இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உரிய நேரம் ஒதுக்கப்படும்’’ என்று வாக்குறுதி அளித் தார். எனினும் எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப் பினர்கள் தொடர்ந்து முழக்கமிட்டனர்.

இதனால் பிற்பகல் 12 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடிய போது, அமளி தொடர்ந்தது. இதனால் பிற்பகல் 2 மணி வரைஅவை ஒத்திவைக்கப் பட்டது. பிற்பகலில் அவை கூடிய போதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் நாள் முழுவதும் அவை ஒத்தி வைக்கப்பட்டது.

மாநிலங்களவை நேற்று காலை 11 மணிக்கு கூடியதும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசும்போது, “நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக மாணவ, மாணவிகள் கேள்வி எழுப்புகின்றனர். அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளது. இதில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் உள்ளனர். அவர்கள் எழுப்பும் பிரச்சினைகள் குறித்து ஒன்றிய அரசு கேட்டறிய வேண்டும்” என்று வலியுறுத்தினார். கார்கேவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனை வரும் முழக்கமிட்ட னர். தொடர் அமளி யால் மதியம் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப் பட்டது. மீண்டும் அவை கூடிய போது அமளி நீடித்ததால் பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்தி வைக்கப்பட்டது. பிற்பகலில் அவை கூடிய போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின்இரு அவைகளும் 2-ஆவது நாளாக நேற்றும் முடங்கின.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *