ஆகஸ்ட் 5ஆம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவிப்பு

3 Min Read

சென்னை, ஜூலை 22– 2026-2027ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் 5 ஆம் தேதி காலை 10 மணிக்கு பேரவையில் தாக் கல் செய்யப்படும் என பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித் துள்ளார்.

தமிழ்நாடு பட்ஜெட்

இதுகுறித்து அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

“2026-2027ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் 5ஆம் தேதி காலை 10 மணிக்கு பேரவையில் தாக்கல் செய்யப்படும். மேலும், ஆகஸ்ட் 6 ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, அலுவல் ஆய்வுக் கூட்டம் நடக்கும். அதில் பட்ஜெட் மீதான விவாதத்தை எத்தனை நாள் நடந்துவது என்பது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்படும்.

சட்டப்பேரவை நடவடிக்கை கள் முழு நேரலை செய்யப்படும். சட்டப் பேரவையில் முன்னர் கடைப்பிடித்து வந்த நடவடிக்கைகள்தான் தற்போதும் தொடரும். வாக்களித்த மற்றும் வாக்களிக்காத பெருமக்களும் வியந்து போற்றி பாராட்டுகின்ற அளவுக்கு இந்த நிதிநிலை இருக்கும் என்று நம்புகிறேன்.

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர் களும் முழு விவாதத்தில் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை சொல்ல அனைத்து உரிமையும் இருக்கிறது; அதேபோல மாற்றுக் கருத்துகள் சொல்லப்படும் போது அமைதியாக இருந்து அதைக் கேட்டு விவாதித்து, பின்னர் பதில் சொல்ல வேண்டும். இந்த முறையும் சட்டப் பேரவை அமைதியாக நடைபெற வேண்டும் என்று விரும்புகிறேன்.

சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப் பட்டுள்ளார். பேரவைத் தலைவரை கேட்டுவிட்டுதான், சட்டப்பேரவை உறுப்பினரை கைது செய்ய வேண்டும் என்கிற விதி இல்லை. சட்டப்பேரவைக்குள் வைத்து கைது செய்யவே சபாநாயகர் அனுமதி தேவை.

பேரவைத் தலைவர் முன் அனுமதியின்றி எவரையும் பேரவை அமைப்பு எல்லைக்குள் கைது செய்யக்கூடாது: வெளியே நடைபெறும் சம்பவங்களில் கைது செய்ய பேரவைத் தலைவரின் அனுமதி தேவையில்லை. 24 மணி நேரத்திற்கு மேல் காவலில் வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், நான் முறையாக மற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மார்க்கண்டேயன் கைது குறித்து தகவல் தெரிவிக்கப்படும்.”  இவ்வாறு அவர் கூறினார்.

“சட்டப்பேரவையில் உள்ள உறுப்பினர்கள் பேரவைக்குள் சைகைகள் காட்டுவது விதிகளுக்கு முரணானது என கூறப்படுகிறது” என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, “முதலமைச்சர் ஜோசப் விஜய் அன்று பேரவையில் சைகை காட்டியதில் எந்த தவறும் இல்லை; விதிக்கு உட்பட்டுதான் அது நடந்தது” என்றார். .

அப்படியென்றால் எதிர்க் கட்சிகள் அனுமதி கேட்டாலும் அளிப்பீர்களா? என்ற செய்தியாளர் களின் கேள்விக்கு, “என்ன சைகை செய்யப்போகிறார் என எனக்கு தெரிந்தால், அனுமதி அளிப்பதா, வேண்டாமா என முடிவெடுப்பேன். முதலமைச்சர் ஜோசப் விஜய் என்ன சைகை அளிக்கப்போகிறார் என்பதை புரிந்து கொண்டு நான் அனுமதி அளித்தேன்” இவ்வாறு அவர் பதிலளித்தார்

மகளிர் உரிமைத் தொகை
ரூ. 2,500-ஆக உயர்த்தப்படுமா?

தமிழ்நாட்டில் தவெக அரசு அமைந்த பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால், தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் பல இதில் நிறைவேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக, மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,500-ஆக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு வருமா என்று பெண்கள் ஆர்வத்தோடு காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இருப்பினும், இந்த முதல் பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்பு களை எந்தளவுக்குப் நிறைவு செய்யும் என்பது சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பிறகே தெளிவாகும்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *