திருவொற்றியூரில் புரட்சிக்கவிஞர் பிறந்த நாள் விழா

1 Min Read

புதுவண்ணை, மே 11- திருவொற்றியூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் புரட்சிக்கவிஞர் 136 ஆம் பிறந்த நாள் விழா சிறப்புக் கூட்டம்  01.05.2026வெள்ளி அன்று மாலை 6 மணி அளவில் சென்னை புதுவண்ணையில் உள்ள பெரியார் மாளிகையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் ஆசைத்தம்பி  தலைமை ஏற்று நடத்தினார். மா. சேகர் வரவேற்புரையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. புலவர் பா. வீரமணி புரட்சிக் கவிஞர் படத்தை திறந்து வைத்தார்.

தொடர்ந்து  திராவிட முன்னேற்ற கழக மாநில சட்டத்துறை துணை செயலாளர் ந. மருது கணேஷ், மாவட்ட திரா விடர் கழக செயலாளர் ந. இராசேந்திரன், அம்பேத்கர் சிறுத்தைகள் அமைப்பின் பாரத் குமார்  ஆகியோர்  உரையாற்றினார்கள்.

இறுதியில் புலவர் பா.வீரமணி புரட்சிக் கவிஞர் அவர்களது தொண்டு பற்றி சிறப்புரை யாற்றினார். தலைவர் முடிவுரையோடு கூட்டம் முடிவுற்றது.

நிகழ்ச்சியில் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் வெ.மு.மோகன்,  மணி.காளியப்பன், தமிழ்மாறன், செல்வா, துரை, சரவணகுமார், அம்பேத்கர் சிறுத்தைகள் பொறுப்பாளர் தோழர் தெய்வமணி, ரவிக்குமார், சாமுண்டீஸ்வரி உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.  மேலும் பகுத்தறிவாளர் கழகம் மற்றும் திராவிடர் கழகத் தோழர்கள் ஏராள மானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *