திராவிடர் கழக தலைமைக் கழகப் பணித் தோழர் கலைமணியின் தந்தையார் கோ. கருணாநிதி மறைவு! கழகத் தலைவர் இரங்கல்

1 Min Read

நமது இயக்கத்தின் தலைமையகமான சென்னை பெரியார் திடலில் உள்ள பணிக் கூடத்தில் கடந்த 17ஆண்டுகளாகப் பணி புரிபவரும், தலைமை நிலைய பொறுப்பாளர்களில் ஒருவரும், சிறந்த கொள்கையாளரும், தலைமையின் நம்பிக்கைக்குரிய நற்பணித் தோழருமான மானமிகு கலைமணி அவர்களது தந்தை திரு. கோ கருணாநிதி (வயது 65) அவர்கள் சிறிது காலம் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில்  சிகிச்சை பலனின்றி நேற்றிரவு  (20.7.2026) மறைந்தார் என்ற துயரச் செய்தி கேட்டு பெரிதும் வருந்துகிறோம். கலைமணியின் பொதுத்தொண்டிற்கு மிகவும் அனுசரணையாகவும் ஒத்துழைப்பு நல்கியவர்களாகவும் அவரது குடும்பத்தவரும், தந்தையாரும் இருப்பது நமது இயக்கத்தின் நல் வாய்ப்பு ஆகும்.

தந்தையை இழந்து வாடும் தோழர் கலைமணிக்கும், அவரது குடும்பத்தவர்களுக்கும்,  தோழர்களுக்கும் நமது ஆறுதலையும், இரங்கலையும்    தெரிவித்துக் கொள்கிறோம்.

 

(கி. வீரமணி)

தலைவர்,

திராவிடர் கழகம்

21.07.2026         

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *