நமது இயக்கத்தின் தலைமையகமான சென்னை பெரியார் திடலில் உள்ள பணிக் கூடத்தில் கடந்த 17ஆண்டுகளாகப் பணி புரிபவரும், தலைமை நிலைய பொறுப்பாளர்களில் ஒருவரும், சிறந்த கொள்கையாளரும், தலைமையின் நம்பிக்கைக்குரிய நற்பணித் தோழருமான மானமிகு கலைமணி அவர்களது தந்தை திரு. கோ கருணாநிதி (வயது 65) அவர்கள் சிறிது காலம் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு (20.7.2026) மறைந்தார் என்ற துயரச் செய்தி கேட்டு பெரிதும் வருந்துகிறோம். கலைமணியின் பொதுத்தொண்டிற்கு மிகவும் அனுசரணையாகவும் ஒத்துழைப்பு நல்கியவர்களாகவும் அவரது குடும்பத்தவரும், தந்தையாரும் இருப்பது நமது இயக்கத்தின் நல் வாய்ப்பு ஆகும்.
தந்தையை இழந்து வாடும் தோழர் கலைமணிக்கும், அவரது குடும்பத்தவர்களுக்கும், தோழர்களுக்கும் நமது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
(கி. வீரமணி)
தலைவர்,
திராவிடர் கழகம்
21.07.2026
