மத்திய பிரதேசத்தில் பொது சிவில் சட்ட வரைவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதலாம்!

1 Min Read

போபால், ஜூலை 20 மத்தியப் பிரதேசத்தில் பொது சிவில் சட்ட வரைவு மசோதாவிற்கு (UCC) மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நேற்று முதலமைச்சர் மோகன் யாதவ் தலைமையில் நடைபெற்ற சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.

இது குறித்து கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மோகன் யாதவ், “இந்தச் சட்டம் பெண்கள் அதிகாரமளித்தலை நோக்கிய ஒரு மிக முக்கியமான படியாகும். பழங்குடியின மக்களைத் தவிர, மாநிலத்தில் உள்ள மற்ற அனைத்து சமூகப் பிரிவினருக்கும் பொருந்தும் வகையில் இந்த வரைவு மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

மசோதாவின் முக்கிய அம்சங்கள்

திருமண வயது வரம்பு: ஆண்களுக் கான திருமண வயது 21 ஆகவும், பெண்களுக்கான திருமண வயது 18 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய சிவில் சட்டத்தின் கீழ் திரும ணங்களைக் கட்டாயமாகப் பதிவு செய்வது அவசியமாக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் தாக்கல்

மத்தியப் பிரதேச மாநில சட்டப் பேரவையின் மழைக்கால கூட்டத் தொடர் இன்று (20.7.2026) தொடங் குகிறது. இத்தொடரிலேயே இந்த மசோதா முறைப்படி தாக்கல் செய்யப் பட்டு நிறைவேற்றப்பட உள்ளது.

“தேசிய ஒற்றுமையை வலுப் படுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, சட்டப் பேரவையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இதற்கு ஆதரவளிக்க வேண்டும்” என்றும் முதல்வர் மோகன் யாதவ் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *