நாகாலாந்தில் நிலச்சரிவு 8 பேர் உயிரிழப்பு!

கோஹிமா, ஜூலை 20- நாகாலாந்து மாநிலம் மோன் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாகப் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் 8 பேர்உயிரிழந்தனர். இதுவரை 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிலச்சரிவினால் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. நிலச்சரிவுக்குப் பிறகு அந்தப் பகுதியில் அதிகளவில் தண்ணீர் புகுந்து வருவதால், மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகக் காவல் துறை தெரிவித்துள்ளது. தற்போது சம்பவ இடத்தில் தன்னார்வலர்கள், காவல் துறை, ராணுவத்தினர் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலச்சரிவு துயர சம்பவத்திற்கு நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ. 4 லட்சமும், காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ. 74,000-மும் உடனடி நிவாரணமாக அவர் அறிவித்துள்ளார். இதேபோல், ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட நிலச் சரிவு மற்றும் திடீர் வெள்ளத்தில் 11 பேர் உயிரிழந் துள்ளனர், 7 பேரைக் காணவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *