சிறுநீரகக் கற்கள்: தண்ணீர் குடித்தால் போதுமா?

1 Min Read

சிறுநீரகக் கற்களைத் தடுக்க நாள்தோறும் 8 டம்ளர் தண்ணீர் குடித்தால் போதும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், இதை முழுமையாகத் தவிர்க்க உணவுப் பழக்கவழக்கங்களிலும் சில மாற்றங்கள் தேவை.

அண்மைய ஆய்வுகளின்படி, இந்தியாவில் சிறுநீரகக்கல் பாதிப்பு மிக வேகமாகவும் அதிர்ச்சி யூட்டும் வகையிலும் அதிகரித்துவருகிறது.

சிறுநீரகக் கற்கள் வயதானவர்களுக்கு மட்டுமே ஏற்படும் என்கிற நிலை மாறி ‘ஜென் ஸீ’ வயதினரிடமும் சுமார் 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளது கவலையை ஏற்படுத்துகிறது.

உடலில் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாடும், போதிய அளவு தண்ணீர் குடிக்காததும் சிறுநீரகக் கற்கள் உருவாவதற்குக் காரணங்கள். ஆனால், நாம் உண்ணும் பதப் படுத்தப்பட்ட (Processed) உணவு வகைகளும் ஒரு முக்கியக் காரணம்.

சோடியம், ஆக்ஸலேட் சத்துகள் அதிகமுள்ள இத்தகைய உணவு வகைகள், சிறுநீரில் கால்சியம், ஆக்ஸலேட் அளவைப் பன்மடங்கு உயர்த்தி, மிக எளிதாகச் சிறுநீரகக் கற்களை உருவாக்கி விடுகின்றன.

எனவே, சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, வெறும் தண்ணீர் குடிப்பதை மட்டுமே கடமையாகக் கருதாமல், கற்கள் உருவாவதைத் தொடக்கத்திலேயே தடுக்க வேண்டும். அதற்கு உணவு முறையிலும் அவசியமான மாற்றங்கள் உடனே தேவை.

தூண்டும் காரணங்கள்

இன்று பலரும் பதப்படுத்தப்பட்ட உணவு முறைகளைப் பெரிதும் நாடுகிறார்கள். சோடியம் (அதிக உப்பு), புரதங்கள் நிறைந்த அசைவ உணவு வகைகளை அதிகம் உட் கொள்கின்றனர்.

இவை சிறுநீரகப் பாதையைத் தீவிரமாகப் பாதித்து, மிக விரைவாகக் கற்கள் உருவாகத் தூண்டுகின்றன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *