புதுடில்லி, ஜூலை 19– மேற்கு வங்கத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின் முடிவில் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் கிடைக்கவில்லை என குற்றஞ் சாட்டப்படுகிறது.
இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து மூத்த வழக்குரைஞர் கோபால் சங்கர நாராயணன் உச்சநீதிமன்றாத்தில் தாக்கல் செய்த மனு, தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், குடி யுரிமையைத் தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு இல்லை,
எஸ்.அய்.ஆர். பணிகளுக்குப் பிறகு வெளி யான வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்பதற்காக குடியுரிமை இழந்ததாகக் கருதக்கூடாது என அறிவுறுத்தினர்.
மேலும், மேற்கு வங்க எஸ்.அய்.ஆர். பணிகள் தொடர்பாக நிலுவையிலுள்ள வழக்குகள் வரும் ஆகஸ்ட் மாதம் விசா ரிக்கப்படும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குடியுரிமையைத் தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு இல்லை! உச்சநீதிமன்றம் தகவல்!
Leave a Comment
