சென்னை, ஜூலை 19 பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவ லர்களுக்கும் அனுப்பப்பட் டுள்ள சுற்றறிக்கையில் கூறப் பட்டுள்ளதாவது: அரசு, அரசு உதவிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி நடப்பு கல்வியாண்டிலும் கலைத் திருவிழா போட்டிகள் ஜூலை 23-ஆம் தேதி தொடங்கி, அக்.28-ஆம் தேதிவரை நடத்தப்பட உள்ளன.
1, 2-ஆம் வகுப்பு, 3 முதல் 5-ஆம் வகுப்பு, 6 முதல் 8-ஆம் வகுப்பு, 9, 10-ஆம் வகுப்பு, 11, 12-ஆம் வகுப்பு என 5 பிரிவுகளாக வயதுக்கு ஏற்ப பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் கதை கூறுதல், வண்ணம் தீட்டுதல், மாறுவேடம், பேச்சு, திருக்குறள் ஒப்புவித்தல், மெல்லிசை, நாட்டுப்புற நடனம், பரதநாட்டியம், மணற்சிற்பம், வில்லுப்பாட்டு, கிராமிய நடனம், நகைச் சுவை,பலகுரல் பேச்சு, பம்பை, உடுக்கை, பறை, மிரு தங்கம், டிரம்ஸ், வயலின், நாதஸ்வரம், கீ போர்டு இசைத்தல், பொம்மலாட்டம் உட்பட பல்வேறு வகைகளில் போட்டிகள் நடத்தப்படும்.
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் கலைத் திருவிழா : வரும் ஜூலை 23-ஆம் தேதி தொடங்குகிறது
Leave a Comment
