குடும்ப அட்டைதாரர்கள்
உடனே இதை செய்யுங்கள்!
தமிழ்நாட்டில் அந்தியோதயா குடும்ப அட்டைகளில் உள்ள உறுப்பினர்களின் விரல்ரேகை பதிவு செய்வதற்கான கால அவகாசம் வரும் 31–ஆம் தேதிக்குள் முடிகிறது. குடும்ப அட்டைதாரர்களின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த, இகேஒய்சி (eKYC) தற்போது மேம்படுத்தப்பட்ட பதிவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, இன்னும் விரல் ரேகை பதிவு செய்யாதவர்கள் உடனடியாக அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று கைரேகையை பதிவு செய்து, உங்கள் குடும்ப அட்டைகள் நீக்கப்படுவதை தவிருங்கள்.
தமிழ்நாட்டில் இடைத்தேர்தல்… பரபரப்பு அறிவிப்பு
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 7 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த 6 மாத காலம் அவகாசம் உள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார். டில்லியில் பேசிய அவர், தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் நடத்துவதற்கு எதிராக வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றார்.நீதிமன்றத்தில் உள்ள அந்த வழக்குகளின் தீர்ப்பை பொறுத்துதான் இடைத்தேர்தல் தேதி அறிவிக்க முடியும் எனவும் அவர் திட்டவட்டமாக கூறினார்.
எம்பிபிஎஸ் படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி தேதி
மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான இணைய வழி விண்ணப்பப் பதிவு ஜூலை 23ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2026-2027 கல்வியாண்டிற்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் (பல் மருத்துவம்) இளநிலை படிப்புக்கு இதுவரை விண்ணப்பிக்காத தகுதியான மற்றும் ‘நீட்’ தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உடனடியாக TN Health இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், இதுவே கடைசி தேதி என்று தமிழ்நாடு மருத்துவ தேர்வுக் குழு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
