உத்தரப்பிரதேச பல்கலைக்கழக விடுதிகளில் மாமிச உணவுக்கு அனுமதி இல்லையாம்!

1 Min Read

லக்னோ, ஜூலை 19 விடுதியில் அசைவ உணவு சமைப்பதற்குத் தடை விதித்து உத்தரப் பிரதேச மாநில கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டது கண்டனத்திற்கு உள்ளானது.

இதையடுத்து மாணவர்கள் தங்களின் அன்றாட புரோட்டீன் ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மீல் மேக்கர் (Soya Chunks), பன்னீர் மற்றும் சோயா பன்னீர் (Tofu) போன்ற சைவ உணவுகளை பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்த உள்ளதாம்.

உத்தரப் பிரதேச மாநில பல்கலைக் கழகங்களின் வேந்தராக உள்ள ஆளுநர் ஆனந்திபென் படேல், ஜூலை 13 அன்று கே.ஜி.எம்.யு பட்டமளிப்பு விழா வில் கலந்துகொண்டு, சில விடுதி உணவகங்களில் அசைவ உணவு பரிமாறப் படுவதாகக் கவலை தெரிவித்தாராம்.

அவரது கருத்துகள், அனைத்து விடுதிகளிலும் அசைவ உணவு தயாரிப்ப தற்குத் தடை விதிக்க பல்கலைக்கழக நிர்வாகத்தைத் தூண்டியதுடன், அரசியல் விமர்சனங்களையும் ஏற்படுத்தியது.

கிங் ஜார்ஜ் மருத்துவப்
பல்கலைக்கழகம் நடவடிக்கையாம்

இதையடுத்து பல்கலைக்கழகத்தில் உள்ள 18 விடுதி உணவகங்களுக்கும் புரதச்சத்து நிறைந்த சைவ உணவைப் பரிமாற அறிவுறுத்தியுள்ளதாக கே.ஜி.எம்.யு. செய்தித் தொடர்பாளர் கே.கே. சிங் தெரிவித்து உள்ளாராம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *