கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர் 45 ஆண்டுகளுக்குப் பின்.. நிரபராதி என விடுதலை!

2 Min Read

புதுடில்லி, ஜூலை 18 ச‘‘ரியான நேரத்தில் வழங்கப்படாத நீதி – நீதி மறுக்கப்பட்டதற்கு சமம்’’ என்பதை மெய்ப்பிக்கும் வகையில் கடந்த 1977-ஆம் ஆண்டில் நடந்த கொலை வழக்கில், குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட நபர், 2026ஆம் ஆண்டில் நிரபராதி என விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.

45 ஆண்டுகளுக்கு பின்

கொலை வழக்கில், கடந்த 1981ஆம் ஆண்டு குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், 45 ஆண்டுகளுக்குப் பின் 2026இல் நிரபராதி என விடுதலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

நீண்டகால சட்டப் போராட் டத்தில், தான் செய்யாத குற்றத்திற் காகக் குற்றம் சாட்டப்பட்டு தண் டிக்கப்பட்டுள்ளதாகத் தொடர்ந்து கூறியும், தன்மீதான கொலைப் பழியை மறுத்து வந்த ஒரு குடிமக னுக்கு இறுதியாக நீதிமன்றம் விடுதலை அளித்திருக்கிறது. ஆனால் என்ன அவர் இந்த குற்றத்துக்காக விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை அனுபவித்து முடித்த பிறகுதான் விடுதலை கிடைத்திருக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 1977ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில், மூன்று பேர் குற்றவாளிகள் என 1981ஆம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், நேற்று (17.7.2026) ஆயுள் தண்டனை பெற்றவர் நிரபராதி என விடுதலை செய்யப்பட்டார். 45 ஆண்டுகாலமாக பல்வேறு கட்ட விசாரணைகள் நடைபெற்று வந்தன. விசாரணை நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனினும், ஆயுள் தண்டனையை அவர் அனுபவித்து முடிந்த நிலையில் இந்த தீர்ப்பு வந்துள்ளது.

ஒரு கொலை வழக்கில், குற்ற வாளிகள் என தண்டனை பெற்ற 3 பேரும் விடுதலை செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றம் அறிவித்த போது, விசாரணையின்போதே 2 பேர் இறந்துவிட்ட நிலையில், ஒருவர் தான் இந்த தீர்ப்பைக் கேட்க உயிரோடிருந்தார்.

வழக்கு விசாரணை தொடரப் பட்டதில் உள்ள குறைபாடுகளை கவனத்தில் கொண்ட உச்ச நீதிமன்றம், சந்தேகத்தின் பலனை குற்றவாளிக்கு சாதகமாக அளித்து ஆயுள் தண்டனை பெற்றிருந்த ஹிரால் லாலை விடுதலை செய்வ தாக அறிவித்தது.

வழக்கில், நேரடி சாட்சியங்களின் வாதத்தையும் ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், கற்பனை அல்லது ஊகம் என்று ஒதுக்கித் தள்ளியிருக்கிறது.

கடந்த 1977ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28ஆம் தேதி பிற்பகலில் நடந்த கொலைச் சம்பவத்தில், சாட்சியங்கள் என்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டவர்கள், உண்மையில் கொலை நடந்த போது, அங்கே இருந் தார்களா என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க முடியவில்லை. குற்றத்தை உறுதி செய்யும் வகை யில் சாட்சிகள், ஆதாரங்கள் இல்லாததால், குற்றவாளி என தண்டனை பெற்றவரை விடுதலை செய்வதாக உச்ச நீதிமன்றம் குறிப் பிட்டுள்ளது.

விசாரணை நீதிமன்றம், உயர் நீதிமன்றமும், சாட்சியங்களிடம் இருக்கும் குறைபாடுகளை கவனிக்கத் தவறிவிட்டன என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *