உலக மக்கள் தொகை நாள் விழிப்புணர்வு கருத்தரங்கில் பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவிகளுக்கு பரிசு

1 Min Read

திருச்சி, ஜூலை 18– உலக மக்கள் தொகை நாளினை (11.07.2026) முன்னிட்டு மருத்துவம், ஊரக நலப்பணி மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் 14.07.2026 அன்று மாபெரும் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரையின் வழிகாட்டுதலில் இளநிலை மருந்தியல் மாணவர்கள், நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் பேரா. தினேஷ் மற்றும் பேராசிரியர்கள் ஏஞ்சலினா ஜெனிஃபர் சாமி, கோகிலவாணி, சக்தி, பிரகதி, சேது ராஜா, அன்சா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப்பேரணியை திருச்சி மாவட்ட உதவி ஆட்சியர் (பயிற்சி) ராகுல் ராகவன் கொடியசைத்து துவக்கி வைத்து சிறப்பித்தார்கள். 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட இப்பேரணி வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் துவங்கி திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நிறைவு பெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அதனைத் தொடர்ந்து மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் பேச்சுப் போட்டியில் முதல் மூன்று பரிசுகளை பெரியார் மருந்தியல் கல்லூரியின் பட்டயப் படிப்பு மாணவிகள் ரா. இனியா, ஏ. விஜயலெட்சுமி மற்றும் ந. பூமிகா ஆகியோர் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
பரிசு வென்ற மாணவிகளை கல்லூரியின் நிர்வாகத்தினர், முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை, பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பாராட்டி வாழ்த்துகளை தெவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *