நேர்காணல் இல்லாத தொழில்நுட்பப் பணிகள் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு மே 11இல் ஆரம்பம்! – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை, மே 4- நேர்காணல் இல்லாத பதவிகளுக்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வில் உதவிப் பொறியாளர் உட்பட 14 பதவி களுக்கான நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு மே 11 முதல் 15ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் பானோத் ம்ருகேந்தர் லால் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

கடந்த 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நேர்காணல் இல்லாத பதவிகளுக்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு நடத்தப்பட்டு தேர்வர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை கடந்த ஜனவரி 23ஆம் தேதி வெளி யிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து இணையவழி சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப் பட்டது. தற்போது உதவி கணக்கு அலுவலர், உதவி பொறியாளர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர் உள்ளிட்ட 14 பதவிகளுக்கான நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு மே 11 முதல் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதற்கு அனுமதிக்கப் பட்டுள்ள தேர்வர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. அழைப்பாணையை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தேர்வர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக தகவல் தெரிவிக்கப்படும்.

அழைப்பாணை தனியே அஞ்சலில் அனுப்பப்படாது. குறிப்பிட்ட தேதியில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு வரத் தவறினால் எக்காரணம் கொண்டும் மறுவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *