வேலூர், ஜூலை 18- வேலூர் மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் 14.07.2026 செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணிக்கு வேலூர் புன்னகை மருத்துவ மனையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப் பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தலைமை தாங்கினார்.பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் இர.அன்பரசன் தொடக்க உரையாற்றினார்.
மாநில மகளிரணி துணைச் செயலாளர் ந.தேன்மொழி விளக்க உரையும், மாவட்டக் காப்பாளர் வி.சடகோபன் நோக்க உரையும் ஆற்றினர்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:
சேலத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செயல் வடிவம் பெற வேலூர் மாவட்ட திராவிடர் கழகம் முழு ஒத்துழைப்பு அளிக்கும் என இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதிய “ஆர்எஸ்எஸ் என்னும் டிரோஜன் குதிரை” நூல் அறிமுக விழாவை வருகிற 19.07.2026 அன்று வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் குடியாத்தம் பெரியார் அரங்கில், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் மருத்துவர் பழ.ஜெகன்பாபு அவர்கள் தலைமையில் சிறப்பாக நடத்துவது என தீர்மானம் இயற்றப்பட்டது.
நீட் மற்றும் EWS-ஐ எதிர்து 30.07.2026 அன்று இருசக்கர வாகனத்தில் பரப்புரைப் பயணம் மேற்கொள்ளும் கழக இளைஞரணி மற்றும் மாணவர் கழகத் தோழர்களை மாவட்டத்தில் அன்புடன் வரவேற்று, வேலூர் சத்துவாச்சாரி மற்றும் குடியாத்தம் பகுதிகளில் பிரச்சார பயணத்தை மிகச் சிறப்பாக நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்: மாவட்ட கழக துணைச் செயலாளர் சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினர்கள் உ.விஸ்வநாதன், சி.லதா, குடியாத்தம் நகர பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ப.ஜீவானந்தம், வேலூர் மாநகர பகுத்தறி வாளர் கழகத் தலைவர் அஸ்ரப், கழக முன்னோடிகள் கு.இளங்கோவன், நெ.கி.சுப்பிரமணி, காட்பாடி நகரத் தலைவர் தயாளன், ஓவியர் தயாளன், மாநகர இளைஞரணி பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அழைப்பு: வி.இ.சிவக்குமார் – மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம், இ.தமிழ்தரணி – மாவட்டச் செயலாளர், திராவிடர் கழகம், மருத்துவர் பழ.ஜெகன்பாபு மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம், முனைவர் வே.வினாயமூர்த்தி – மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்
