குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய கழகச் செயலாளர் எஸ். குமாரதாஸ் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆசாரி பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் அவரை கன்னியாகுமரி மாவட்ட கழகச் செயலாளர் கோ. வெற்றி வேந்தன் மாவட்ட துணைச் செயலாளர் எஸ். அலெக்சாண்டர் ஆகியோர் 15.7.2026 அன்று உடல் நலம் விசாரித்தனர். அதற்கு முன்னதாக மாவட்டத் தலைவர் மா.மு.சுப்ரமணியம் காப்பாளர் ம. தயாளன் ஆகியோர் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனை சென்று உடல் நலம் விசாரித்து ஆறுதல் கூறி வந்தனர்.தோழர் குமாரதாஸ் அவர்களுடைய உடல் நிலை இப்போது முன்னேறி வருகிறது.
