பொத்தனூர், ஜூலை3- முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும் நாமக்கல் மாவட்ட திராவிடர் கழக காப்பாளருமான பொத்தனூர் மக்களால் க.ச என்று அன்போடு அழைக்கப்படும் பொத்தனூர் சண்முகம் அவர்களது 104 ஆவது ஆண்டு பிறந்தநாள் 2.7. 2026 வியாழன் அன்று கழகத் தோழர்கள், உறவினர்கள், ஊர் பொதுமக்கள் திரளாக வருகை தந்து சிறப்பாக க்கொண்டாடினர் அவருக்கு பயனாடை – புத்தகம் – புத்தாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தும் வாழ்த்து பெற்றும் மகிழ்ந்தனர்.
முன்னதாக அவரால் உருவாக்கிய பெரியார் படிப்பகத்தில் உள்ள தந்தைபெரியார் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினார். அதன்பிறகு அவரது இல்லத்தில் பிறந்தநாள் இனிப்பு அப்பம் (Cake) வெட்டி கொண்டாடப்பட்டது. விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த முக்கியத் தோழர்கள் கு குமார் (திருச்செங்கோடு கழக மாவட்ட காப்பாளர்), சு.சரவணன் (திருச்செங்கோடு கழக மாவட்ட தலைவர்), மாநில ப.க. அமைப்பாளர் வழக்குரைஞர் இளங்கோ, க.பொன்னுசாமி (பொதுக்குழு உறுப்பினர்), மு.சீனிவாசன் (திருச்செங்கோடு கழக மாவட்ட துணை செயலாளர்), கே.எஸ.அசேன் (நாமக்கல் மாவட்ட செயலாளர்), வீர முருகன் (மாவட்ட துணைச் செயலாளர்), ஆ.சுரேஷ் (இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர்), ச.அன்புமணி (பொத்தனூர் நகர தலைவர்), பி.சுந்தரம் (பொத்தனூர் நகர செயலாளர்), அ.அப்துல் கலாம், பி.வி.ராஜேந்திர பாபு, ம.மகாலட்சுமி (மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர்), மருத அறிவாயுதம் (பக மாவட்ட செயலாளர்), த.பவுன்ராஜ் (மதிமுக மாணவரணி மாநில துணை செயலாளர்), மு.ராஜசேகர் (மதிமுக மாவட்ட மாணவர் கழகத் துணை அமைப்பாளர்), ப.குமாரசாமி (கரூர் மாவட்டத் தலைவர்), ச.மோகன் (மாவட்ட தொழிலாளர் அணி தலைவர்), அ.ச.இளவழகன் (சேலம் மேனாள் மாவட்ட தலைவர்), அரங்க இளவரசன் (சேலம் மாநகர தலைவர்), போலீஸ் ராஜு (சூரமங்கலம்), தமிழர் தலைவர் (சேலம் மாவட்ட துணைச் செயலாளர்), பிரியா தமிழர் தலைவர், வேலூர் ப.க. பொறுப்பாளர்கள் முத்துக்கண்ணன், முத்துச்சரவவணன், சிந்தாமணியூர் சி.சுப்பிரமணியம் (மேட்டூர் மாவட்ட காப்பாளர்), ஓமலூர் பெ.சவுந்தரராசன் (பொதுக்குழு உறுப்பினர்), வேலூர், ஈரோடு மாவட்ட தலைவர் இரா.நற் குணன், பொதுக்குழு உறுப்பினர் கோ.பாலகிருட்டிணன், தலை மைச்செயற்குழு உறுப்பினர் ஈரோடு.த.சண்முகம்,
குடும்ப உறவுகள் தமிழரசி விவேகானந்தன், மலர்க்கொடி ரவிந்திரன். செங்குட்டுவன் – சாந்தி, கலைமணி – மோகனா, குந்தவை (எ) சிந்துஜா – சக்கரவர்த்தி மற்றும் ஏராளமான உறவுகள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் நண்பகல் விருந்தளிக்கப்பட்டது.
நன்கொடை
பொத்தனூர் க.சண்முகம் அவர்கள், தமது 104ஆம் ஆண்டு பிறந்த நாளுக்கென்றும், தனது வாழ்விணையர் ச.சுந்தராம்பாள் 23ஆம் ஆண்டு நினைவு நாள் முன்னிட்டும் ‘விடுதலை’ வளர்ச்சி நிதிக்கென்று ரூ.ஆயிரம் நன்கொடை வழங்கினார்.
