கருத்துரிமையை நசுக்குவதா? ஆள்வோருக்கு எதிராகக் கருத்துக் கூறக் கூடாதா?

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவருக்கு எதிராகக் கொண்டுவரப்பட இருப்பதாகச் சொல்லப்படும் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்திற்கு ஆதரவளிக்க ஒரு த.வெ.க. சட்டமன்ற உறுப்பினருக்கு பேரம் பேசப்பட்டதாகத் தொடரப்பட்டுள்ள ஒரு வழக்கின் விசாரணைக்காக என்ற பெயரில் புதிய தலைமுறை நெறியாளரும், ஊடகவியலாளருமான திரு.விஜயனைக் காவல்துறையினர் மூன்று முறை அழைத்து, நள்ளிரவிலும் அலைக்கழித்து, கைப்பேசியையும் பறித்து வைத்துக் கொண்டது அத்துமீறிய செயலாகும்.

உரிய விதிகளைப் பின்பற்றி, எவர் ஒருவரையும் விசாரணைக்கு அழைக்கக் காவல்துறைக்கு உரிமை உண்டு. ஆனால், விசாரணை என்ற பெயரில் அலைக்கழிப்பதும், விதிகளை மீறி கைப்பேசியைப் பறித்துக் கொள்வதும், மிரட்டுவதும், அதிலும், ஊடகவியலாளர் மீது இத்தகைய நடவடிக்கைகளை ஏவுவதும் கருத்துரிமையை நசுக்கும் கண்டனத்திற்குரிய செயலாகும்.

கடந்த சில நாள்களாகவே, சமூக ஊடகங்களில் ஆள்வோருக்கு எதிராகக் கருத்துச் சொல்வோர் மீது கைது நடவடிக்கைகள் பாய்ந்துவருவதும், ஊடகவியலாளர்கள் மிரட்டப்படத் தொடங்கியிருப்பதும் ஜனநாயக அரசுக்கான சரியான அறிகுறியல்ல. உடனடியாக திரு. விஜயனின் கைப்பேசி திருப்பி அளிக்கப்பட வேண்டும். இனியும் தமிழ்நாடு அரசு இத்தகைய நடவடிக்கைகளை, கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் வகையில் யார்மீதும் தொடரக் கூடாது.

  கி.வீரமணி

தலைவர்,

  திராவிடர் கழகம்

17.7.2026

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *