டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* பழநி கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி நிலம் முறைகேடாக விற்பனை தனிநபர்களுக்கு பத்திரப் பதிவு செய்தது செல்லாது: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு
* சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசின் செயல் தலைவர் சுப்ரியா சுலே, எம்.பி., மோடி அரசின் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு ஆதரவு.
* சிபிஎஸ்இ டிஜிட்டல் மதிப்பீடு உச்சநீதிமன்றம் கவலை: டிஜிட்டல் விடைத்தாள் மதிப்பீட்டு முறையால் மாண வர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக குறிப்பிட்ட தலைமை நீதிபதி, மதிப்பீட்டு முறையில் அமைப்பு சார்ந்த குறைபாடுகள் இருப்பதாக கவலை தெரிவித்தார். இந்த விவகாரத்தில் சிபிஎஸ்இ மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து அடுத்த வாரம் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* டில்லி ஜந்தர் மந்தரில் கடந்த 18 நாட்களாக பட்டினிப் போராட்டம் மேற்கொள்ளும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உடல் நலம் பாதிக்கப்படுவதை சுட்டிக்காட்டி, ஒன்றிய அரசின் நிலை என்ன? என டில்லி உயர் நீதிமன்றம் கேள்வி. கரப்பான் ஜனதா கட்சி, ஒரு நாள் அடையாள பட்டினிப் போராட்டம் என அறிவிப்பு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பீகார் கல்லூரிகளில் இனி ஆளுநர் நாட்டாமை இருக்காது: மாநிலப் பல்கலைக்கழகங்களிலிருந்து பட்டப்படிப்பு கல்லூரிகளைப் பிரிப்பதற்கான சட்ட வரைவு ஒன்றை, வரவிருக்கும் பருவமழைக் கூட்டத்தொடரில் பீகார் அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இந்த முன்மொழிவின் படி, இளங்கலை பட்டப் படிப்புகளை வழங்கும் 500-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் புதிதாக உருவாக்கப்படும் உயர்கல்வித் துறையின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வரும்; இதனால் பல்கலைக்கழகங்களின் வேந்தராகவும் (CHANCELLOR) செயல்படும் ஆளுநரின் அதிகாரம் இதில் இருக்காது…
தி இந்து:
* தொகுதி மறுவரையறை தேவையான ஆதரவை திரட்ட என்.டி.ஏ (NDA) மீண்டும் முயற்சி. திரிணாமூல் மற்றும் சிவசேனா கட்சிகளில் ஏற்பட்டுள்ள பிளவுகள் மற்றும் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் ஆகியவற்றின் மீது என்.டி.ஏ நம்பிக்கை வைத்துள்ளது;
தி டெலிகிராப்:
* தேர்தல் ஆணையத்தின் ‘விலக்குதல்’ (EXCLUSION) சார்ந்த எஸ்.அய்.ஆர். நடைமுறையை முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி, இது ‘ஜனநாயகத்தை சீர்குலைத்தது’ என கடுமையாகச் சாடியுள்ளார்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* அரசுப் பதவியில் இருக்கும்போதே, எல்.பி.ஜி. பகிர்மான முகமையை நடத்திய நீதிபதி: ஓய்வு பெற்ற நீதிபதி சித்தார்த் மிருதுல், டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் மணிப்பூர் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றிய தனது 16 ஆண்டுகால பதவிக்காலத்தில், எல்.பி.ஜி பகிர்மான முகமை ஒன்றை நடத்தி வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
– குடந்தை கருணா
