சென்னை, ஜூலை 15 கல்வி வள்ளல் காமராசரின் 124ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (15.7.2026) காமராசர் சிலைக்குக் கீழ் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு மலர் தூவி தமிழர் தலைவர் மரியாதை செலுத்தினார்.
‘பச்சைத் தமிழர்’, ‘தமிழ்நாட்டின் ரட்சகர்’ என்றெல்லாம்பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களால் பாராட்டப்பட்டவர் கல்வி வள்ளல் காமராசர் ஆவார்.
காமராசர் அவர்களின் 124ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (15.7.2026) காலை 10.30 மணியளவில் சென்னை அண்ணா சாலை பெரியார் பாலம் (ஜிம்கானா கிளப்) அருகில் உள்ள சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த காமராசரின் படத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொருளாளர் வீ. குமரேசன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ. வீரமர்த்தினி, கழக வழக்குரைஞரணித் தலைவர் த. வீரசேகரன், துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், திராவிட மகளிர் பாசறை மாநிலச் செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க. அன்பழகன், மாநில ஒருங்கிணைப்பாளர் வி. பன்னீர்செல்வம், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.செ. கோபால், மாநில இளைஞரணி இணைச் செயலாளர் வழக்குரைஞர் சோ. சுரேஷ், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, துணைத் தலைவர்கள் மயிலை டி.ஆர். சேதுராமன், மு.சண்முகப்பிரியன், மாவட்ட இளைஞரணி செயலாளர் பெரியார் யுவராஜ், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் அ. அன்பு, பா. இராசேந்திரன் (எம்.டி.சி.), சூளைமேடு ஆட்டோ சேகர், அரும்பாக்கம் சா.தாமோதரன், சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் கரு. அண்ணாமலை, பேராசிரியர் க. பெரியார்செல்வி, மரகதமணி, கோ. தங்க தனலட்சுமி, தொண்டறம் உள்ளிட்டவர்களும்,
வட சென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், மாவட்டச் செயலாளர் புரசை அன்புச்செல்வன், கோ. தங்கமணி, சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் வேலூர் பாண்டு, செயலாளர் தமிழினியன், விடுதலை நகர் பி.சி. ஜெயராமன், கோவர்த்தனம், சி. காமராஜ், தாம்பரம் மாவட்டத் தலைவர் இரா. முத்தைய்யன், மோகன் ராஜ், பெரியார் மாணாக்கன், பார்த்தீபன், ரங்கநாதன், விஜய், மகேஷ், டைசன், உடுமலை வடிவேல், அருள் மற்றும் திரளான தோழர்களும் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
தெலங்கானா மாநிலம் அய்தராபாத்தை தலை மையிடமாகக் கொண்டு இயங்கும், “மூடநம்பிக்காலு நிர்மூலன் சமிதி” சார்பில் (MNS) மாநிலத் தலைவர் பைரி நரேஷ், இளைஞரணித் தலைவர் அச்சுதராஜ், மத்திராலா அங்குலு, ஏழுரு தேசய்யா மற்றும் இந்த அமைப்பைச் சேர்ந்த சென்னையில் வசிக்கும் அனந்தராஜ், ஆத்மபூரா அசரத்தய்யா ஆகியோரும் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.
