திருவாரூர் நகர கழகத் தலைவர் சிவராமன் இல்ல இணையேற்பு விழா கழகப் பொதுச் செயலாளர் நடத்தி வைத்து வாழ்த்துரை

திராவிடர் கழகம்

திருவாரூர், ஜூலை 15- 12.7.2026 அன்று காலை 10.00 மணியளவில் திருவாரூர் வர்த்தகர் சங்க அரங்கத்தில் திருவாரூர் நகர கழகத் தலை வர் கா.சிவராமன்- தமிழரசி ஆகியோரது மகன் திருவாரூர் மாவட்ட இளைஞரணிச் செயலாளர், வானவில் மன்ற கருத்தாளர் சி.தமிழவன், திருவாரூர் மாவட்டம் பெரும் பண்ணையூர் சி.மயிலையன், மகேஸ்வரி மாலதி, ஆகியோர் மகள் ம.துர்காதேவி, ஆகியோரது வாழ்க்கை இணையேற்பு நிகழ்வினை கழகப் பொதுச் செயலாளர் முனைவர் வீ.அன்பு ராஜ், அவர்கள் தலைமை ஏற்று உறுதிமொழி கூறி வாழ்வியல் நெறிமுறை உரையாற்றி வாழ்க்கை இணையேற்பு நிகழ் வினை நடத்தி வைத்தார்.

நகரத் தலைவர் கா.சிவராமன் அனைவரையும் வரவேற்றார்.

மாநில விவசாய தொழி லாளர் அணிச் செயலாளர் வி.மோகன், மாவட்டக் காப்பாளர் வீர. கோவிந்தராஜ், மாவட்டச் செயலாளர் கோ.பிளாட்டோ, மாவட்ட விவசாய தொழிலாளர் அணிச் செயலாளர் க.வீரையன், பெரியார் பெருந்தொண்டர் க.முனியாண்டி, ஆகியோர் முன்னிலை வகித்து மண மக்களை வாழ்த்தினார்கள்.

திருவாரூர் திமுக மாவட்டச் செயலாளர், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன், மாநில கழக ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், மாவட்டத் தலைவர் எஸ்.எஸ்.எம்.கே.அருண்காந்தி, கழக பேச்சாளர் இராம.அன்பழகன், சிபிஅய்எம் மாவட்டச் செயலாளர் டி.முருகையன், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் அரங்க.ஈவேரா, சீர்காழி நெடுஞ்செழியன், திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் இரா.செந்தூர பாண்டியன், திராவிட மாணவர் கழக மாநில இணைச் செயலாளர் மு.இளமாறன், திராவிட மாணவர் கழக துணைச் செயலாளர் தே. நர்மதா, திமுக திருவாரூர் நகர மன்ற உறுப்பினர்.ஜி.வரதராஜன், அதிமுக நகர மன்ற உறுப்பினர் கலியபெருமாள், ஆகியோர் மணமக்களை வாழ்த்தினர்.

திருவாரூர் மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.கரிகாலன், பொதுக்குழு உறுப்பினர்கள் பி.சாமிநாதன், இரா.மகேஸ்வரி, மன்னார்குடி மாவட்டச் செயலாளர் சு.கிருட்டிண மூர்த்தி, மாவட்டத் துணைச் செயலாளர் புட்பநாதன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அ.ஜெ.உமாநாத், நாகை மாவட்ட துணைத் தலைவர் பொன்.செல்வராசு, நகரச் செயலாளர் அ.செல்வேந்திரன், நகர துணைத் தலைவர் சவு.சுரேஷ், திருவாரூர் ஒன்றியத் தலைவர் கா.கவுதமன், ஒன்றியச் செயலாளர் செ.பாஸ்கரன், நன்னிலம் ஒன்றியத் தலைவர் இரா.தன்ராஜ், ஒன்றியச் செயலாளர் சு.ஆறுமுகம் கொரடாச்சேரி ஒன்றிய தலைவர் சி.ஏகாம்பரம், ஒன்றியச் செயலாளர் மு,சரவணன் குடவாசல் ஒன்றிய துணைத் தலைவர் சி.அம்பேத்கர், ஒன்றியச் செயலாளர் க.அசோக்ராஜ், மாவட்ட இளைஞரணித் தலைவர் செ.இரவிக்குமார், திராவிட மாணவர் கழக மாவட்டச் செயலாளர் அ.அறி வுச்சுடர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் சி.சரஸ்வதி திருவாரூர் ஒன்றிய மகளிர் அணித் தலைவர் க.சரோஜா, பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர் க. தமிழ்நேயன், நன்னிலம் நகரத் தலைவர் தன.சஞ்சீவி, தமிழ் நாடு அறிவியல் இயக்க திருவாரூர் மாவட்டச் செயலாளர் பி.சங்கர லிங்கம். வானவில் மன்ற கருத்துறையாளர் இராமாமிருதம். இராஜ.மணிகண்டன் சதீஸ். விஜய் நிலவழகன் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் தோழர்கள் உறவினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

முன்னதாக 9 மணி அளவில் மாவட்டத் தலைவர் எஸ்எஸ்எம்கே.அருண் காந்தி தலைமையில் வாழ்விணையர்கள் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், கழக இலட்சியக் கொடியை ஏற்றினார். முழக்கங்கள் எழுப் பப்பட்டன. திருவாரூர் நக ரம் முழுவதும் திரும்பும் இட மெல்லாம் கருப்பு சிவப்பு கழக கொடி பட்டொளி வீசி பறந்தன.

மணமக்கள், மணமகன் தாய் தந்தை மணமகள் தாய் தந்தை மணமகன் சகோதரர் சமரன் அஸ்வினி ஆகியோருக்கு கழகப் பொதுச் செயலாளர் சால்வை அணிவித்து சிறப்பித்தார்.

மணமக்களுக்கு குடும்பத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, அவர்கள் எழுதி அனுப்பிய வாழ்த்து மடல் படம் பிடித்து விளம்பர பதாகை வைக்கப்பட்டிருந்தன.  மேடையிலும் வாசிக்கப்பட்டது.

மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக. பொன்முடி, நிகழ்வினை ஒருங்கிணைத்தார்.

இறுதியாக மணமகனின் சகோதரர் சி.சமரன் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *