துருக்கியில் மகப்பேறின்போது அறுவைப் பண்டுவம் மேற்கொண்ட 100 மருத்துவர்கள் இடைநீக்கம்

1 Min Read

இஸ்தான்புல், ஜூலை 15- துருக்கியில் மகப்பேற்றின் போது அறுவைப் பண்டுவம் மேற்கொண்டதற்காக
100-க்கும் மேற்பட்ட மகப்பேறு மருத்துவர்கள் மீது அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

சம்பந்தப்பட்ட மருத்துவர்களுக்கு அபராதம் விதித்ததோடு அவர்களை இடைநீக்கம் செய்து கட்டாயப் பயிற்சி பெறவும் உத்தரவிட்டுள்ளது.

2023ஆம் ஆண்டின் கடைசியாகக் கிடைத்த தரவுகளின்படி, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பின் 38 நாடுகளிலேயே துருக்கியில்தான் அறுவைப் பண்டுவம் மகப்பேறுகளின் விகிதம் மிக அதிகமாக உள்ளது. அந்த ஆண்டில் அங்கு நடந்த ஒவ்வொரு 1,000 நேரடி மகப்பேறுகளிலும் சுமார் 615 மகப்பேறுகள் அறுவைப் பண்டுவம் முறையில் செய்யப்பட்டுள்ளன.

பெண்கள் இயற்கை முறையில் மகப்பேறு அடை வதை வலியுறுத்தி வரும் துருக்கி அதிபர் எர்டோகன், அந்நாட்டில் அதிகரித்து வரும் விருப்பத் தேர்விலான சிசேரியன் மகப்பேறுகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த விரும்புகிறார். இதன் ஒரு பகுதியாக, தகுந்த மருத்துவக் காரணம் இன்றி தனியார் மருத்துவமனைகளில் விருப்பத்தின் பேரில் அறுவைப் பண்டுவம் செய்வதற்கு அந்நாட்டு அரசு ஏப்ரல் 2025ஆம் ஆண்டு முதல் தடை விதித்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *