சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி மறைவுக்குக் கழகத் தலைவர் இரங்கல்!

0 Min Read

தனது ‘அஞ்ஞாடி’ நாவலுக்காகச் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் – ‘கருவேலம் பூக்கள்’ திரைப்பட இயக்குநர் பூமணி அவர்கள் நேற்று  (12.07.2026) இரவு மறைவுற்ற செய்தி அறிந்து வருந்துகிறோம். ஜாதிப் பிரச்சினைகள், ஒடுக்கப்பட்ட மக்கள் சந்திக்கும் அவலங்களுக்கெதிரான குரலைப் பிரதிபலித்த இயக்குநர் வெற்றிமாறனின் ‘அசுரன்’ திரைப்படம், இவரது ’வெக்கை’ நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

எழுத்தாளர் பூமணி அவர்களின் மறைவுக்கு நமது இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

 

சென்னை     

13.7.2026    

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *