அயோத்தி ராமன் கோயில் நன்கொடை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

புதுடில்லி, ஜூலை 13- அயோத்தி ராமன் கோயில் நன்கொடை விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் நீதி விசாரணை நடத்தப்படவேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் அமைந் துள்ள அயோத்தி ராமர் கோயிலுக்கு பக்தர்கள் அளிக்கும் நன்கொடை, காணிக்கை பணம் திருடப்படுவதாக புகார்கள் எழுந்தன. சுமார் ரூ.200 கோடி வரை மோசடி செய்யப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்க விசாரிக்க கடந்த ஜூன் 15-ஆம் தேதி சிறப்பு விசாரணைக் குழு நியமிக்கப்பட்டது.

இந்நிலையில் ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய், அறங் காவலர் அனில் மிஸ்ரா ஆகியோர் தங்கள் பதவிகளை விட்டு விலகினர். இந்த வழக்கில் இதுவரை 8 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

நன்கொடை கையாடல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்த பிறகு, அயோத்தி ராமன் கோயிலில் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அங்கு பணிபுரியும் ஊழியர்கள் பலமுறை சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். கைப்பேசி கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அஜய் உபாத்யாய் நேற்று (12.7.2026) செய்தியாளர்களிடம் கூறியதாவது: நம்பிக்கை என்ற பெயரில் அயோத்தி ராமன் கோயிலில் கொள்ளை நடந் துள்ளது. இப்பிரச்சினை நிதி சார்ந்ததாக மட்டுமல்லாமல், பக்தர்களின் உணர்வுகளோடு தொடர்புடையது.

சிறீ ராமரின் பெயரில் திரட்டப் பட்ட நிதியானது பாஜக – ஆர்எஸ்எஸ் அமைப்பினரால் அரசியல் ரீதியான கொள்ளைக்கு ஒரு வழியாக மாறி யுள்ளது. இது வெறும் நிதி மோசடி மட்டுமல்ல, கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கை மற்றும் உணர்வுகளுக்கு இழைக்கப்பட்ட பெரும் துரோகம். பிரதமரின் மேற்பார்வையில் கோயில் விவகாரங்களைக் கண் காணிக்க ஒரு அறக்கட்டளை உரு வாக்கப்பட்டது. இப்போது இந்த மோசடிக் குற்றச்சாட்டுக்கு யார் பொறுப்பேற்பார்கள்?

இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றக் கண்காணிப்பில் நீதி விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரி வித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *