‘நீட்’ வரிசையில் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் நுழைவுத் தேர்வு ஒன்றிய அரசின் திட்டத்திற்குக் கடும் எதிர்ப்பு!

2 Min Read

நாடு முழுவதும் நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்கள் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது 10-ஆம் வகுப்பு மாணவர்களையும் நுழைவுத் தேர்வு வளையத்திற்குள் கொண்டு வரும் ஒன்றிய அரசின் புதிய முயற்சி கடும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

புதுடில்லியில் உள்ள மத்திய சமஸ்கிருதப் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய மருத்துவ முறைக்கான தேசிய ஆணையம் (NCISM) இணைந்து, பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்காக ‘நீட்-பிஏ’ (NEET-PA – National Eligibility-cum-Entrance Test – Pre-Ayurveda) என்ற புதிய நுழைவுத் தேர்வை அறிமுகம் செய்துள்ளது.

திட்டத்தின் கட்டமைப்பு
மற்றும் கால அளவு

ஆயுர்வேத ‘குருகுல கல்வி’ முறையில் சேர விரும்பும் மாணவர் களுக்காக இத்திட்டம் வடிவமைக் கப்பட்டுள்ளது. இதன் மொத்த கால அளவு ஏழரை (7.5) ஆண்டுகள் ஆகும்:

2 ஆண்டுகள்: முன்-படிப்பு (Pre-Ayurveda – மேல்நிலைக் கல்விக்கு இணையானது).

4.5 ஆண்டுகள்: இளநிலை ஆயுர்வேத மருத்துவப் படிப்பு (B.A.M.S).

1 ஆண்டு: கட்டாய மருத்துவ மனைப் பயிற்சி (அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் (சமஸ்கிருத கல்வி வாரியங்கள் உட்பட) 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் மாணவர்கள் 2026-ம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதியன்று 15 வயது பூர்த்தியடைந்த வராகவும் 25 வயதிற்கு உட்பட்டவ ராகவும் இருக்க வேண்டும்.

தேர்வு முறை 

தேர்வு நாள்: 2026 ஆகஸ்ட் 30 அல்லது செப்டம்பர் 6-இல் நடக்க வாய்ப்புள்ளது.

விண்ணப்பப் பதிவு: 2026 ஜூலை மூன்றாவது வாரத்தில் தொடங்கும்.

வடிவமைப்பு: ஓஎம்ஆர் (OMR) தாள் அடிப்படையிலான ‘ஆப்லைன்’ தேர்வு. 150 நிமிடங்களில் 120 கொள்குறி வகை (MCQ) வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். தவறான பதில்களுக்குக் கழித்தல் மதிப்பெண்கள் இல்லை.

மொழிகள்: சமஸ்கிருதம், ஹிந்தி அல்லது ஆங்கிலம் ஆகியவற்றில் எழுதலாம்.

பாடப்பிரிவுகள்: பகுதி ஏ (சமஸ் கிருத இலக்கணம் &இலக்கியம்), பகுதி பி (அறிவியல் &கணிதம்), பகுதி சி (ஆயுர்வேதத்தின் அடிப்படைத் தத்துவங்கள் &வரலாறு).

தேர்ச்சி மதிப்பெண்: பொதுப் பிரிவினர் 50%, எஸ்சி/எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் 40% பெற வேண்டும்.

இந்தத் தேர்வு கடினமாக இருக்கும் பட்சத்தில், மாணவர்கள் வழக்கம் போல 11, 12-ஆம் வகுப்புகளில் அறிவியல் பாடங்களை எடுத்துப் படித்துவிட்டு, ‘நீட் யுஜி’ (NEET-UG) தேர்வு மூலமும் B.A.M.S படிப்பில் சேரலாம்.பிளஸ் 2 முடித்த பிறகு நடத்தப்படும் நுழைவுத் தேர்வே மாணவர்களிடையே பெரும் மன உளைச்சலையும் தற்கொலைகளையும் ஏற்படுத்தும் சூழலில், தற்போது 10-ஆம் வகுப்பு குழந்தைகளையும் போட்டித் தேர்வுக்குள் தள்ளுவது அவர்களின் எதிர்காலத்தைச் சிதைக்கும் எனப் பெற்றோர்கள் அஞ்சுகின்றனர்.

மேலும், இத்தேர்வில் சமஸ்கிருதம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், இது மறைமுகமாகச் சமஸ்கிருத மொழியைத் திணிக்கும் முயற்சி என்றும், இதன் மூலம் கிராமப்புற மற்றும் அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவு அடியோடு பறிக் கப் படும் என்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. கல்வித் துறை மாநிலங்களின் கைகளை விட்டுச் சென்றுவிட்ட நிலையில், இந்த புதிய மாற்றம் மேலும் பல சிக்கல்களை உருவாக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

கூடுதல் விவரங்களை அறிய விரும்பும் மாணவர்கள் www.sanskrit.nic.in என்ற இணையதளத்தைப் பார்வை யிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *