தமிழ்நாடு தொல்லியல் சுற்றுலா பழந்தமிழர் வரலாற்றை அறியும் புதையல் பாதை – உலக அரங்கில் அடையாளம் கிடைக்குமா?

1 Min Read

சென்னை, ஜூலை 12 பழந் தமிழர் வரலாறு மற்றும் பண் பாட்டை அறிந்து கொள்ள ஆர்வ முள்ளவர்களுக்கு ‘தமிழ்நாடு தொல்லியல் சுற்றுலா’ ஒரு சிறந்த புதையல் வாய்ப்பாக அமைந்துள்ளது.

கீழடி, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொற்கை உள்ளிட்ட அகழ்வா ராய்ச்சி தளங்கள் தமிழரின் தொன்மையை உலகுக்கு உணர்த் தும் சான்றுகளாக உள்ளன. இந்த தளங்களை முறையாக மேம்படுத்தி, ‘உலக அகழ்வாராய்ச்சி வல்லுநர் களுக்கும் ஆர்வலர்களுக்கும் சிறந்த தொல்பொருள் சுற்றுலா தளமாக’ மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

என்ன பயன்?

  1. வரலாற்று விழிப்புணர்வு: பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்கள் நேரில் சென்று தமிழரின் 2000+ ஆண்டு நாகரிகத்தை காணலாம்.
  2. உலக அங்கீகாரம்: சர்வதேச ஆராய்சியாளர்கள் வருகையால் தமிழரின் தொன்மைக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைக்கும்.
  3. பொருளாதாரம்: உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்பு மற்றும் சுற்றுலா வருவாய் பெருகும்.

தொல்லியல் தளங்களை பாதுகாத்து, அருங்காட்சியகங்கள், வழிகாட்டி வசதிகள், டிஜிட்டல் தகவல் மய்யங்களை அமைத்தால் தமிழ்நாடு உலகின் முக்கிய தொல் லியல் சுற்றுலா மய்யமாக மாறும்.

புதிய அரசு நடவடிக்கை எடுக்குமா?

தமிழரின் தொன்மையை உலகம் அறியும் வகையில், இந்த தொல்லியல் தளங்களை மேம்படுத்தி சுற்றுலா திட்டமாக அறிவிக்க ‘புதிய அரசு உரிய வழிவகை செய்யுமா’ என்ற எதிர்பார்ப்பு ஆர்வலர்கள் மத்தியில் உள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *