சிறீ சாய்ராம் கல்லூரியின் நிறுவனரின் நினைவு நாள் – மரக்கன்று நடும் விழா

1 Min Read

தாம்பரம், ஜூலை 12 சிறீ சாய் ராம் கல்விக் குழும நிறுவனரும், சமூக சேவகருமான லியோ முத்துவின் 11-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஏரிக்கரைகளில் 200 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி 10.7.2026 அன்று நடைபெற்றது.

இதில் சிறீ சாய்ராம் கல்விக் குழுமத் தலைவர் சாய்பிரகாஷ் லியோ முத்து பேசியதாவது:

அரிமா லியோ முத்துவின் கல்வி, சமூக சேவைப் பணிகளை நினைவுகூரும் வகையில், சுற்றுவட்டாரக் கிராமங்களில் பயன்தரும் பல்வேறு நலத்திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மடிப்பாக்கத்தில் பள்ளியைத் தொடங்கி, படிப்படியாக தனது விடாமுயற்சி மூலம் பல பொறியியல், மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கினார்.

இதன் மூலம் ஆயிரக்கணக்கான மாணவர் களை தொழில்திறன் மிக்கவர்களாக உள்நாடு, வெளிநாடுகளில் பணிபுரியும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த அவரது வழியில் கல்வி வளர்ச்சிப் பணிகள் தொடரும்.

அவரது விருப்பப்படி, ஆண்டுதோறும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர் களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகை ரூ.8 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *