சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 134 வயசு!

1 Min Read

சென்னை உயர்நீதிமன்றத்தின் பாரம்பரிய கட்டடம் அமைக்கப்பட்டு 134 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு ஜூலை 13இல் சிறப்பு விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், மூத்த வழக்குரை ஞர்களுக்கான தனிச்சிறப்பாக ஓய்வறையை தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி திறந்து வைக்கிறார். இந்த பாரம்பரியக் கட்டடம் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1,626 பணியிடங்கள்.. +2 தகுதி போதும்

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் 1,626 பயிற்சிப் பணி (அப்ரண்டீஸ்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. *பணிகள்: ஃபிட்டர், அக்கவுண்டன்ட், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் *கல்வித்தகுதி: +2, அய்டிஅய், பி.எஸ்சி.,பி.காம்., *வயது வரம்பு: 18-24 *தேர்ச்சி முறை: மெரிட், சான்றிதழ் சரிபார்ப்பு *விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ள நபர்கள் இந்த <<inhttps://iocl.com/apprenticeships>> இணைப்பின் மூலம் ஜூலை 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

 அமைச்சரவைக் கூட்டங்களில்
வெளியாட்கள் பங்கேற்கலாமா?

முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் வெளியாட்கள் (விஷ்ணு மற்றும் ஜான் ஆரோக்கியசாமி) பங்கேற்றதாக சர்ச்சை எழுந்தது. தமிழ்நாடு அரசுப் பணி நடைமுறை விதிகள் 1978 படி அமைச்சரவைக் கூட்டங்களுக்கு வெளியாட்களுக்கு தடை இல்லை. அதேநேரம், வெளியாட்களை அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதிப்பது அரசியல் ரீதியாகவும், நெறிமுறை சார்ந்தும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *