சேலம், ஜூலை 12- மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடுவது வழக்கம்.
ஆனால், அந்த குறிப்பிட்ட காலக் கட்டத்தில் அணையின் நீர்மட்டம் 90 அடிக்கு குறையாமல் இருந்தால்தான் அது சாத்தியம். தற்போதைய சூழ்நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 76 அடிக்கும் குறைவாகவே இருக்கிறது.
அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. அணைக்கு வினாடிக்கு 125 கனஅடி நீர் வரும் நிலையில், குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் நீர் இருப்பு 38.7 டி.எம்.சி.யாக உள்ளது.
தென்மேற்கு பருவ மழையும் போதிய அளவு கைகொடுக்காத நிலையில் மேட்டூர் அணை நீர் மட்டம் 76 கன அடியில் இருந்து 75 கன அடியாக குறைந்து குட்டை போல் காட்சி அளிக்கிறது.
இதனால்,டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
