அரியலூர் கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு 1500 கன அடி தண்ணீர் திறப்பு!

காட்டுமன்னார் கோவில், ஜூலை 10 சென்னைக்கு தடையின்றி குடிநீர் அனுப்புவதற்காக, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு, கீழணை வழியாக வீராணத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறது.

கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக நாள்தோறும் 73 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கோடை மழை பெய்யாமல் வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால், வீராணம் ஏரிக்கு நீர் வரத்து இன்றி, ஏரியின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து, 41.50 அடி (275.75 மில்லியன் கனஅடி) தண்ணீர் இருப்பு இருந்தது. ஏரியின் சில பகுதிகள் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்பட்டது.

தண்ணீர் திறப்பு

சென்னை குடிநீருக்கு ஏரியில் இருந்து நாள் தோறும், 73 கன அடி அளவில் நீர் அனுப்பப் பட்டாலும், போது மானதாக இல்லை. அதனால், சென்னை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் வலி யுறுத்தலில், 8.7.2026 அன்று முதல்  கீழணையில் இருந்து சென்னை குடி நீருக்காக வீராணம் ஏரிக்கு வடவாற்றில் மீண்டும் தண்ணீர் திறக் கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது, 78 அடி அளவில் உள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததால், டெல்டா பாசனத்திற்கு நீர் திறக்காமல், குடிநீர் தேவைக்காக மட்டுமே 3,000 கன அடி அளவில் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் கல்லணை வந்தடைந்த நிலையில், அங்கிருந்து கொள்ளிடம் ஆற்றில் 2,000 கன அடி திறக்கப்பட்டு நேற்று முன்தினம் கீழணைக்கு வந்தடைந்தது.

கீழணைக்கு வரும் 1,545 கன அடி தண்ணீரும் வடவாற்றில் திறக்கப்பட்டு வீராணம் ஏரிக்கு அனுப்பப்படுகிறது. வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து 1,000 கன அடியாக உள்ளது. நேற்றைய (9.7.2026) நிலவரப்படி வீராணம் ஏரியில், 41.90 அடியாக (326.60 மில்லியன் கன அடி) தண்ணீர் இருப்பு உள்ளது. சென்னை குடிநீருக்கு 73 கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.

மேட்டூர் அணையில் இருந்து குடிநீருக்கு திறக்கப்படும் 1,500 கன அடி தண்ணீர்,  சென்னை குடிநீருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தொடர்ந்து திறந்துவிடப்படுகிறது.

கல்லணையில் இருந்து தொடர்ந்து, 15 நாள்களுக்கு, தினம் 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு கீழணைக்கு வரும் நீர், அப்படியே வீராணம் ஏரிக்கு அனுப் பப்படுகிறது. வடவாறு மூலம் வீராணம் ஏரிக்கு வரும் நீர் பாசனத் திற்கு முற்றிலும் தடை செய்யப்பட்டு பொதுப் பணித்துறை அலுவலர்கள் கண்காணித்து வருகின் றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *