சென்னை, ஜூலை 10 ‘ஒன்றிய கல்வித் துறையின் கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் முறைமை வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் பள்ளி இடைநிற்றல், தேசிய சராசரியை விட குறைவாக உள்ளது’ என, பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
ஒன்றிய கல்வித்துறை வெளியிட்ட கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் முறைமை அறிக்கை 2025 – 2026 இல், பல்வேறு முக்கிய குறியீடுகளில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது.
மாநிலத்தின் மாணவர் – ஆசிரியர் விகிதம் 22:1 என்ற நிலையில் உள்ளது. இது, தேசிய சராசரியான 24:1 என்பதை விட சிறப்பாக உள்ளது. மேலும், தொடக்க நிலை மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் இடைநிற்றல் இல்லை. இடைநிலை கல்வியில் இடைநிற்றல் விகிதம் 6.2 சதவீதம்; இது, தேசிய சராசரியான 9.5 சத வீதத்தை விட குறைவு.
மாணவர் சேர்க்கையிலும் தமிழ்நாடு தேசிய அளவில் முன்னணியில் உள்ளது. 10 ஆம் வகுப்புக்கு அடுத்த மேல்நிலை கல்வியில் மாணவர் சேர்க்கை 85.1 சதவீதமாக உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அய்ட்ரஜன்தானாம்!
8 போக்குவரத்துத் துறையின் எதிர்காலம் அய்ட்ரஜன் எரிபொருள் தான் என்றும், 10 வழித்தடங்களில் இதற்கான சோதனை நடந்து வருவதாக ஒன்றிய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
