திராவிடர் கழகப் பொதுக் குழுவில், கழகத்தில் இணைந்த புதிய இளைஞர்கள் ‘விடுதலை’ சந்தா, நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினர் (சேலம், 4.7.2026)

மேட்டுப்பாளையம் கழக மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர். உடன்: வேலுச்சாமி, இரா.ஜெயக்குமார் மற்றும் பொறுப்பாளர்கள் உள்ளனர்.

நன்கொடை

வேலூர் மாவட்ட மகளிரணியினர் ஈஸ்வரி சடகோபன், கலைமணி, சுமதி ஆகியோர் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தனர். • நிகழ்ச்சிக்கு நன்கொடை வழங்கிய பெரியார் பெருந்தொண்டர் வாரிசுகள் அமெரிக்காவில் வசிக்கும் மருத்துவர் தேவராசன், மருத்துவர் மணிமேகலை ஆகியோர் சார்பில் வாழப்பாடி அமிர்தம் சுகுமார் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தார். • செய்யாறு மாவட்டத் தலைவர் அ.இளங்கோ, தி.காமராஜ் ஆகியோர் தமிழர் தலைவரிடம் நன்கொடை வழங்கினர். • கருநாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து வருகை தந்த முல்லைக்கோ, வழக்குரைஞர் குணவேந்தன் ஆகியோர் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து ‘விடுதலை’ சந்தா வழங்கினர்.

நன்கொடை

சென்னை தனலட்சுமி தங்கமணி, வழக்குரைஞர் மணி, கிருட்டினகிரி திராவிட மணி மற்றும் சேலம் பகுதித் தோழர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து நன்கொடை வழங்கினர்.

நன்கொடை

கன்னியாகுமரி கோ.வெற்றிவேந்தன், அத்திவெட்டி வீரையன், கோபி யோகானந்தம் ஆகியோர் தமிழர் தலைவரிடம் விடுதலை சந்தா, நன்கொடை வழங்கினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *