தேசிய விருது பெற்ற திரைப்பட ஒளிப்பதிவாளரும், இயக்குநரும், எழுத்தாளருமான செழியன் மறைவு கழகத் தலைவர் இரங்கல்

தேசிய விருது பெற்ற திரைப்பட ஒளிப்பதிவாளரும், இயக்குநரும், எழுத்தாளருமான செழியன் அவர்கள் இன்று (10.7.2026) காலை உடல் நலக் குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தி கேட்டு பெரிதும் வருந்துகிறோம். இளம் வயதிலேயே திரையுலகில் குறிப்பிடத்தக்க தனித்துவமான அடையாளமாகத் திகழ்ந்தவர். சீரிய பகுத்தறிவாளர். அவரது கலை உலகச் சாதனைகளுக்காக தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் “பெரியார் விருது” வழங்கி மகிழ்ந்தோம். இன்னும் பல சாதனைகளை அவர் செய்ய வேண்டிய வயதில்  அவரது மறைவு தமிழ்ச் சமூகத்திற்கு ஓர் இழப்பாகும்.

அவரது மறைவால் வாடும் உறவினர்கள், நண்பர்கள், கலை உலகத்தினருக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்  

சென்னை        

10.7.2026 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *