இந்த ஊரில் காலித்தனம், சொத்துச் சேதம் நடந்தது என்றால், இந்த ஊர் மக்கள் அனைவருக்குமே ‘தண்ட வரி’ அதாவது ‘திமிர் வரி’ போட்டு இருக்க வேண்டும் அரசாங்கம்… அது போலப் போட்டிருந்தால் மக்கள் ‘நான் இல்லை, நீ இல்லை, எவனோ காலிகள் விளைவித்தது, நமது தலையில் வந்து விடிந்து விட்டதே’ என்று உணருவார்கள்!, இல்லையா? காலித்தனம் செய்கிறவர்களுக்கும் ஆதரவு கொடுக்கப் பயப்பட்டு, இத்தகைய காரியங்களில் ஈடுபடவும் யோசிப்பார்களா? இல்லையா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
