சென்னை, ஜூலை 9- திமுக விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன் நேற்றுமுன்தினம் (7.7.2026) வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
நாகப்பட்டினம் விவசாயி சோமசுந்தரம் கூட்டுறவு வங்கியில் தமது நிலத்தை அடகு வைத்து 85 ஆயிரம் ரூபாய்க் கடன் வாங்கியிருந்தார். பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக இரண்டு முறை விஜய் அரசு அறிவிப்பு வெளியிட்டும் 75 ஆயிரம் ரூபாய் வரையி லான கடன்கள் மட்டுமே முழுமையாகத் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதனால் வாங் கிய கடன் முழுமை யாகத் தள்ளுபடி செய்யப் படாததால் சோமசுந்தரம் மன உளைச்சலில் இருந் தார். பயிர்க்கடனை முழு மையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி சென் னையில் 4ஆம் தேதி நடந்த விவசாயிகள் அமைப்புகள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்று வீடு திரும்பி யதுமே மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார். 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளின் கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் 50 சத விகிதம் தள்ளுபடி செய்யப் படும் என்று வாக்குறுதி கொடுத்தார் விஜய்.
ஆனால் ஆட்சிக்கு வந்த விஜய் விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நிறை வேற்றவில்லை. மகாராட்டி ராவில் 55.72 லட்சம் விவசாயிகள் வாங்கிய 36,585 கோடி ரூபாய் பயிர்க் கடன்களை மகாராட்டிரா அரசு தள்ளுபடி செய்திருக்கிறது. மகாராட்டிராவில் தள்ளுபடி செய்ய முடியும். தமிழ்நாட்டில் முடியாதா? தேர்தல் வாக்குறுதிப்படி முழுமையாகக் கடன் தள்ளுபடி செய்யவில்லை. அந்த வாக்குறுதியை நிறைவேற்றினால்தான் அனைத்து விவசாயிகளுக் கும் பலன் கிடைக்கும்.
மேட்டூரிலிருந்து காவிரி நீர் திறந்து விடப்படாத தால் குறுவை சாகுபடி பொய்த்து மேலும் மன உளைச்சலுக்கு விவ சாயிகள் தள்ளப்பட்டிருக் கிறார்கள். தேர்தல் அறிக் கையில் சொன்னபடி முழுமையான கடன் தள்ளுபடியை விஜய் அரசு செய்ய வேண்டும். இறந்த விவசாயி சோமசுந்தரம் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். விவ சாயிகளை ஏமாற்றிய ஆட்சியாளர்கள் நீடித்து நிலைத்ததில்லை என்பதே வரலாறு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
