டேராடூன், ஜூலை 8 அயோத்தியில் உள்ள ராமன் கோயில் நன்கொடைகள் கையாடல் செய்யப்பட்ட குற்றச்சாட்டு குறித்த விவாதங்களும், விசாரணைகளும் நடைபெற்றுவரும் சூழலில், பத்ரிநாத் தாம் எனப்படும் கோயிலில் காணிக்கைகள் தொடர்பான இதேபோன்ற புகார்கள் குறித்து விசாரிக்க பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் குழு கடந்த 3.7.2026 அன்று உத்தரவிட்டுள்ளது.
பத்ரிநாத், கேதார்நாத் கோயில்களில் நன்கொடைகள் திருடப்படுவதாகவும், கையாடல் செய்யப்படுவதாகவும் தொடர்ந்து சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின. இது தொடர்பான புகார்களைக் கோயில் குழு தீவிரமாகக் கருத்தில் கொண்டுள்ளதாகவும், இவ்விவகாரத்தை விசாரிக்க ஒரு விசாரணைக் குழுவை அமைக்க உத்தரவிட்டுள்ளதாகவும் பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் குழுத் தலைவர் ஹேமந்த் திவேதி கூறினார்.
ஹேமந்த் திவேதி மறுப்பு!
கடந்த 3.7.2026 அன்று, ‘பைரவ் சேனா’ என்ற அமைப்பு பத்ரிநாத் தாமில் நிதி முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம் சாட்டியது. கோயில் குழுத் தலைவரின் தனிப்பட்ட உதவியாளருடன் தொடர்புடைய நிதி முறைகேடு விவகாரம் குறித்தும் நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியது. ஆனால், சமூக ஊட கங்களில் பிரமோத் நெவுட்டியாலைத் தனது ‘தனிப்பட்ட செயலாளர்’ என்று அடையாளப்படுத்துவதை ஹேமந்த் திவேதி மறுத்தார்.
அந்த நபர் தனது தனிப்பட்ட செய லாளர் அல்ல என்றும், அக் கோயிலின் வழக்கமான அரசு ஊழியர் என்றும், அவர் இதற்கு முன்பு கோயில் குழுவின் மூன்று முன்னாள் தலைவர்களிடம் தனிப்பட்ட உதவியாளராகப் பணியாற்றியுள்ளார் என்றும் திவேதி குறிப்பிட்டார். விசாரணை முடிந்த பிறகு, ஏதேனும் ஊழியர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், விதிகளின்படி அவர்கள் மீது கடுமையான மற்றும் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திவேதி உறுதியளித்தார்.
இதற்கிடையில், சிறீ பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி சோகன் சிங் ரங்கட் கூறு கையில், “சமூக ஊடகங்களில் எழுந்த புகார்களைத் தொடர்ந்து பத்ரிநாத் கோயில் வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. ஆனால், கிடைக்கப்பெற்ற காட்சிகளில் போதிய தெளிவு இல்லை. இருப்பினும், இவ் விவகாரத்தின் தீவிரத் தன்மையைக் கருத்தில் கொண்டு, முழு விவகாரமும் அக் கோயில் குழுத் தலைவரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது’’ என்று அவர் கூறினார்.
தலைவரின் அறிவுறுத்தலின்படி, சம்பந்தப்பட்ட ஊழியர்களிடமிருந்து விளக்கங்கள் கோரப்பட்டு வருவதாகத் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்தார். ‘‘குழு அமைக்கப்பட்டதும், கிடைக்கக் கூடிய சான்றுகள், சம்பந்தப்பட்ட தரப்பி னரின் வாக்குமூலங்களின் அடிப்படையில் விரிவான விசாரணையை நடத்தி, அது தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும்’’ என்று அவர் கூறினார். விசாரணையின் போது ஏதேனும் பாதகமான உண்மைகளோ அல்லது முறைகேடுகளோ தெரியவந்தால், சிறீ பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் குழுச் சட்டம், 1939, ஊழியர் நடத்தை விதிகள் ஆகியவற்றின் அடிப்படையில் குற்றவாளிகள் மீது சட்டரீதியான, துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார்.
பணியிடை நீக்கம்!
இந் நிலையில், நான்கு பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. நிதி கட்டுப்பாட்டாளர் ஹேம் கண்ட்பால், சட்ட அதிகாரி எஸ்.எஸ். பார்த்வால், தலைமை நிர்வாக அதிகாரி ராஜன் நைதானி மற்றும் கேதார்நாத் மூத்த நிர்வாக அதிகாரி டி.எஸ். புஜ்வான் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். நேற்று (7.7.2026) முதற்கட்ட விசாரணை தொடங்கப்பட்ட நிலையில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட பிரமோத் நெவுட்டியால் நேற்று (07.07.2026) பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்துக் கருத்துத் தெரிவித்த திவேதி, “ஊழல் விவகாரத்தில் கோயில் நிர்வாகம் ‘பூஜ்ஜிய சகிப்புத்தன்மை’ (zero-tolerance) கொள்கையைக் கடைப்பிடிப்பதாகக் குறிப்பிட்ட அவர், விசாரணையில் எந்தவொரு ஊழியரும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் கடுமையான துறைரீதியான மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றும் தெரிவித்தார்.
பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் குழு என்பது ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்; இது பத்ரிநாத் கோயில் மட்டுமின்றி, உத்தராகண்ட் மாநிலம் முழுவதும் உள்ள 44 பிற கோயில்களையும், பள்ளிகளையும், தர்மசாலைகளையும் நிர்வகித்து வருகிறது.
பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோயில்க ளில் பெறப்படும் நன்கொடைகள், வங்கி களில் செலுத்தப்படுவதற்கு முன்னதாக, குழுவின் ஊழியர்கள், வங்கி அதிகாரிகள், தன்னார்வலர்கள் அடங்கிய முறையான செயல்முறையின் மூலம் எண்ணிப் பதிவு செய்யப்படுவதாகக் கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
மாநில சட்டமன்றத்தின் கூட்டுக்குழு விசாரணை நடத்தப்பட வேண்டும்!
இந்தக் குற்றச்சாட்டுகள் உத்தராகண்ட் மாநிலத்தில் அரசியல் சர்ச்சையையும் கிளப்பியுள்ளன. உத்தராகண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் கணேஷ் கோடியல், புஷ்கர் சிங் தாமி தலைமையிலான அரசை விமர்சித்ததுடன், இது குறித்து நீதித்துறை விசாரணை அல்லது மாநில சட்டமன்றத்தின் கூட்டுக்குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலி யுறுத்தினார்.
அயோத்தி ராமர் கோயில் தொடர்பான நிதி முறைகேடு புகார்கள் குறித்த விசாரணைக்கு அடுத்தபடியாக, பத்ரிநாத் தாமில் பெறப்பட்ட நன்கொடைகளில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகார்கள் பக்தர்களின் மனதைப் புண்படுத்தி யுள்ளதாகக் கூறிய கோடியல், இதில் தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
திருப்பதி, சபரிமலை, அயோத்தி என்று தொடர்ந்து பல்வேறு கோயில்க ளில் நடந்துள்ள முறைகேடுகள் தொடர்புடைய செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் நிலை யில்தான், நெடுங்காலமாக இருக்கும் பிரச்சி னைகளும் வெளிவரத் தொடங்கியுள்ளன.
