தியாகி மதுராந்தகம் துரைபாபுவின் மூத்த மகனும், தீவிர பெரியாரிய கொள்கைவாதியும், டாக்டர் ராகுலின் தந்தையுமான து.ஜெயபிரகாஷ் நாராயண் (வயது 81) வயது மூப்பின் காரணமாக 26.6.2026 அன்று காலை 9.40 மணிக்கு இயற்கை எய்தினார்.
அன்னாரின் இறுதி ஊர்வலம் அவரது பட்டாபிராம் (88, லெட்சுமி நகர், நெமிலிச்சேரி) இல்லத்திலிருந்து 27.6.2026 பகல் 2 மணிக்கு புகழ்வணக்கம், வீரவணக்கம் எழுச்சி முழக்கங்களுடன் புறப்பட்டு, பிற்பகல் 3 மணியளவில் அம்பத்தூர் நவீன எரிவாயு தகன மேடையில், முழு பெரியாரிய கொள்கைப்படி எவ்வித மூடச் சடங்கு, சம்பிர தாயங்களும் இன்றி எளிமையாக உடல் எரியூட்டப்பட்டது.
து.ஜெயபிரகாஷ் நாராயணன் 50 ஆண்டுகளுக்கு முன்பே தன் திருமணத்தை இராகுகாலத்தில் ஜாதி ஒழிப்புத் திருமணமாக தாலியில்லா திருமணமாக நடத்திக் காட்டியவர் என்பதுடன், தன் மூத்த மகனுக்கும் (மூத்த மகன் டாக்டர் ராகுல்) 2009இல் சீர்காழியில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் இராகு காலத்தில் ஜாதி ஒழிப்புத் திருமணம் நடத்திக் காட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
