வருவாய் ஆய்வாளர்கள் ஒப்புதல் இல்லாமல் சான்றிதழ்கள் வழங்க தமிழ்நாடு அரசு பரிசீலனை

1 Min Read

சென்னை, ஜூலை 7– வருவாய் ஆய்வாளர்கள் ஒப்புதல் இல்லாமல் சான்றிதழ்கள் வழங்க தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்து வருகிறது. மூன்று அடுக்கு நடைமுறையால், ஒரு சான்றிதழ் வழங்க பல நாட்கள் ஆகிறது.

இணையதளம் முறை

தமிழ்நாட்டில் ஜாதிச் சான்றிதழ், வருவாய்ச் சான்றிதழ். இருப்பிடச் சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு வருவாய்த்துறை ஆவணங்களை பெற பொதுமக்கள் இ-சேவை மய்யங்கள் அல்லது இணையதளம் மூலம் விண்ணப்பிக்கின்றனர். இந்த விண்ணப்பம் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று, அவர் கள ஆய்வு செய்து அறிக்கை அளிக்கிறார்.
பின்னர் அந்த கோப்பு வருவாய் ஆயவாளரிடம் அனுப்பப்படுகிறது. அவர் மீண்டும் சரிபார்த்து பரிந்துரை செய்த பிறகு தாசில்தாரிடம் செல்கிறது. தாசில்தார் இறுதி ஒப்புதல் அளித்த பின்னரே சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த பணிகள் இணையதளம் முறையிலேயே நடைபெறுகிறது. இந்த மூன்று அடுக்கு நடைமுறையால், ஒரு சான்றிதழ் வழங்க பல நாட்கள் ஆகிறது.
தமிழ்நாடு அரசு பரிசீலனை
இதனை தவிர்க்கும் வகையில், வி.ஏ.ஓ. ஆய்வு அறிக்கையை அடிப்படையாக கொண்டு நேரடியாக தாசில்தார் ஒப்புதல் அளிக்கும் முறையை அறிமுகப்படுத்த தமிழ்நாடு அரசு பரிசீலித்து வருகிறது. இந்த நடைமுறை அமலுக்கு வந்தால் சான்றிதழ் வழங்கும் காலம் கணிசமாக குறையும் என அதிகாரிகள் கருதுகின்றனர். கிராம நிர்வாக அலுவலர் ஆய்வுக்குப் பிறகு கோப்பு நேரடியாக தாசில்தாரிடம் செல்வதால் ஒரு நிர்வாக அடுக்கு குறையும்.
இதன் மூலம் பொதுமக்கள் சான்றிதழ்களை விரைவாக பெற முடியும். முதல்கட்டமாக சில சான்றிதழ்களுக்கு மட்டும் வருவாய் ஆய்வாளர் நிலை தேவையில்லை என்பது சோதனை அடிப்படையில் கொண்டுவர உள்ளதாக தெரிகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *