பா.ஜ.க.வில் சேர்ந்துவிட்டு மோதுங்கள் துரோகிகளே..! மம்தா அறைகூவல்

1 Min Read

திரிணாமூல் காங்கிரஸ் அதிருப்தி தலைவர்கள் பாஜகவுடன் கூட்டு சேர்ந்து செயல்படுவதாக மம்தா  குற்றஞ்சாட்டியுள்ளார். சமூக ஊடகங்களில் நேரலையில் பேசிய அவர், 15 ஆண்டுகளாக பதவியை அனுபவித்தபோது ஏன் கருத்து வேறுபாட்டை தெரிவிக்கவில்லை எனக் கேட்டார். மேலும், துரோகிகள் பாஜகவில் இணைந்துவிட்டு என்னுடன் மோதுங்கள். இந்த கடினமான நேரத்தில் விசுவாசமாக இருக்கும் தொண்டர்கள் தான் கட்சியின் ‘பொக்கிஷம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகல்

அரசுக்கு கூடுதல் செலவு

தேர்தல் முடிவுக்கு பிறகு முதலமைச்சர் விஜய் உள்பட 7 பேர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளனர். இதனால் அரசுக்கு ரூ.38.5 கோடி செலவு ஏற்பட வாய்ப்புள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். ஏனென்றால், 2026 தேர்தலுக்கு ரூ.1,302 கோடியை தமிழ்நாடு அரசு ஒதுக்கியது. ஒரு தொகுதிக்கு ரூ.5.5 கோடி என செலவிடப்பட்டுள்ளது. எனவே, வருகிற இடைத்தேர்தலுக்கு அரசுக்கு கூடுதலாக ரூ.38 கோடி செலவாகும் என்கின்றனர்.

உடல் உறுப்புகளைச் சேதப்படுத்தும் பழக்கங்கள்

அதிகமான இனிப்பு அருந்துவதும் கல்லீரலுக்குச் சுமையை கொடுத்துப் பாதிப்பை ஏற்படுத்தும். குளிர் பானங்களை அதிகம் குடிப்பது எலும்புகளைப் பலவீனப்படுத்தும்.

தொடர்ந்து ஃபாஸ்ட் புட் சாப்பிடுவது இதய ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும்.

இரவு தூங்காமல் கண் விழித்திருப்பது மூளைக்கு கடும் பாதிப்பை உண்டாக்கும்.

 

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *