இனாம் மாத்தூரில் பெரியார் மருத்துவக் குழுமம், ஹர்ஷமித்ரா மருத்துவமனை இணைந்து நடத்திய புற்றுநோய் பரிசோதனை முகாம்!

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

திருச்சி, ஜூலை 6- நாகமங்கலம் ஹர்ஷமித்ரா மருத்துவமனை, பெரியார் மருத்துவக் குழுமம், பெரியார் மருந்தியல் கல்லூரி திருச்சி அய் பவுண்டேசன் மற்றும் மணிகண்டம் அரிமா சங்கம் இணைந்து O5.07.2026 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2.30 மணி வரை  பொது மருத்துவம், கண் பரிசோதனை,  மற்றும் புற்றுநோய் பரிசோதனை  முகாமினை இனாம் மாத்தூர் கிராமத்தில்  பொதுமக்கள் பயன் பெறும் வண்ணம்  நடத்தியது.

ஹர்ஷமித்ரா மருத்துவ மனையின் நிர்வாக இயக்குநர்கள் மருத்துவர் கோவிந்தராஜ் வர்தனன் மற்றும் சசிப்ரியா கோவிந்தராஜ்  ஆகியோர் தலைமையில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரையின் ஒருங்கிணைப்பில்  மணிகண்டம் அரிமா சங்கத் தலைவர் பிரின்ஸ் ரமேஷ், துணைத் தலைவர்  திருப்பதி, மண்டலத் தலைவர்  தங்கவேல், தொழிலதிபர்  சிவசுப்ர மணியம் மற்றும் சேவை நாயகன் அபுபக்கர் ஆகியோர் முன்னிலையில் மணிகண்டம் மேனாள் ஒன்றிய பெருந்தலைவர் கமலம் கருப்பையா மற்றும் மாத்தூர் மேனாள் ஊராட்சி மன்றத் தலைவர் பாரதிதாசன் ஆகியோர் மருத்துவ முகாமினை துவக்கி வைத்து சிறப்பித்தனர்.

இதில்  ஹர்ஷமித்ரா மருத்துவ மனையின் மருத்துவர் சுகிர்தா  தலைமையில் பல் மற்றும் வாய்ப் புற்றுநோய் பரிசோதனையும், திருச்சி பெரியார் மணியம்மை மருத்துவ மனையின் மருத்துவ அலுவர் மரு. முனவர் சுல்தானா தலைமையில் பொது மருத்துவ முகாமும் நடைபெற்றது.

மேலும் திருச்சி அய் பவுண் டேஷன் ஆப்டோமெட்ரிஸ்ட் மது தர்ஷினி தலைமையில் கண் பரிசோதனை முகாமும் நடைபெற்றது. திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதம் மருத்துவக் கல்லூரியின் எலும்பியல் துறைத் தலைவர் மரு. கல்யாணசுந்தரம் மற்றும்  பல் மருத்துவத் துறைத் தலைவர் மரு. ராஜ்மோகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்த இம்மருத்துவ முகாமில் 31 ஆண்கள்,  21 பெண்கள், ஒரு குழந்தை என மொத்தம் 53 பேர் கலந்து கொண்டு  பயனடைந்தனர். மேலும் கண் பரிசோதனை முகாமில் 27 பேர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

மணிகண்டம் அரிமா சங்கத்தின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இம்மருத்துவ முகாமில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேரா.  தினேஷ்,  பேராசிரியர்கள் கோகிலவாணி, ஷெரன் செல்சியா மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட  மாணவர்கள் மருத்துவப் பயனாளி களுக்கு மருந்து மாத்திரைகளை இலவசமாக வழங்கினர்.

இம்மருத்துவ முகாமில் திருச்சி பெரியார் மணியம்மை மருத்துவமனையின் செவிலியர் காமாட்சி மற்றும் செவிலிய மாணவி பொதுமக்களுக்கு இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனைகளை மேற் கொண்டனர்.

மருத்துவ முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும்  ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் மக்கள் தொடர்பு அலுவலர் சிவ அருணாசலம், பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் மணிகண்டம் அரிமா சங்கம் சிறப்பாக செய்தி ருந்தது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *