சென்னை, ஜூலை 6- திருவேற்காட்டில் திமுக நிர்வாகி இல்ல திருமண விழா நேற்று (5.7.2026) நடைபெற்றது. இதில் திமுக இளைஞரணி செயலாளரும், எதிர்க் கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் இணையர்களை வாழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “இன்று நாட்டில் என்ன நடக்கிறது என்பதை, நீங்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். சில பேர் சோஃபா வந்த உடனே நம்மை விட்டுவிட்டுச் சென்றிருக் கிறார்கள்.
ஆனால், நீங்கள் அத்தனை பேரும் நாங்கள் என்றைக்கும் திமுகவுடன் இருப்போம் என்று உறுதியோடு வந்திருக்கிறீர்கள். இஸ்லாமியர்களுக்கும் திமுகவுக்குமான உறவை யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது, உங்களுக்கு திமுக என்றைக்குமே ஒரு காவல் அரணாக இருக்கும்.
இப்பொழுது ஏற்பட்டிருக்கக்கூடிய இந்த அரசியல் பேரிடர் காலத்திலும் நம் தமிழ்நாட்டை நிச்சயம் உங்களுக்காக நின்று காப்போம், தமிழ் நாட்டை மீட்போம்” என்றார்.
