பீகார் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினருக்கு நான்கு ஆண்டு சிறைத் தண்டனை

1 Min Read

புதுடில்லி, ஜூலை 5- புத்தாண்டு கொண்டாட் டத்தின் போது நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் பெண் உயிரிழந்த வழக்கில், பீகார் மாநில பாஜக சட்டமன்ற உறுப்பனிர் ராஜு குமார் சிங்குக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து டில்லி நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி இரவு புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது, டில்லியில் உள்ள பண்ணை வீடு ஒன்றில் நடந்த மகிழ்ச்சி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வானில் துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டது. இதில் தவறுதலாக அர்ச்சனா குப்தா என்ற பெண் மீது குண்டு பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொண்டாட் டத்தின் போது பீகாரின் சாஹேப்கஞ்ச் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினரான ராஜு குமார் சிங் (56) தான் துப்பாக்கியால் சுட்டார் என்பது சாட்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டது.

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 304, பகுதி 2 (கொலைக் குற்றமாகாத மரணம் விளைவித்தல்) மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் ராஜு குமார் சிங் குக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. அத்துடன் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவும் டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி விஷால் கோக்னே உத்தர விட்டுள்ளார்.

முன்னதாக, தமக்கு மரணம் விளைவிக்கும் நோக்கம் இல்லை என சட்டமன்ற உறுப்பின ரான தரப்பில் வாதிடப் பட்டது. ஆனால், “கொண்டாட்டங்களின் போது நடத்தப்படும் துப்பாக்கிச் சூடுகள் நம் நாட்டில் பல உயிர்களைப் பறிக்கும் சாபக் கேடாக மாறியுள்ளன” என நீதிமன்றம் கடும் கண் டனம் தெரிவித்தது குறிப் பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *