இந்நாள் – அந்நாள்

1 Min Read

அறிவியலாளர் மேரிகியூரி நினைவு நாள்
 இன்று (4-7-1934)

புற்றுநோயின் கோரப் பிடியிலிருந்து மனித இனத்தையே மீட்ட பெருமைக்குரியவர் மேரி கியூரி என்பதை நன்றியோடு  நினைவுக்கூரத்தக்கதாகும். வேண்டும்.  உலகத்திலேயே நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி என்னும் பெருமைக்குரியவர் மேரி கியூரி. அவர் கண்டுபிடித்த ‘ரேடியம்’ புற்றுநோயைக் குணப்படுத்தும் மருத்துவமுறையாகிய கதிரியக்க சிகிச்சைக்கு வழி வகுத்தது.

மேரி கியூரி, 1903 ஆம் ஆண்டு பேராசிரியர் ஹென்றி பெக்கோரல், தம் கணவர் பியாரி கியூரி ஆகியோருடன் இணைந்து இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு பெற்றார். தம் கணவர் மறைவுக்குப் பிறகு 1911 ஆம் ஆண்டு பொலோனியம், ரேடியம் ஆகிய கதிரியக்கத் தனிமங்களைக் கண்டுபிடித்ததற்காக வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பெற்றார். இப்படி இரண்டு வேறுபட்ட துறைகளில் நோபல் பரிசு பெற்றதும் ஒரு வரலாற்றுச் சாதனையாகும்.

தமது ஆய்வுகளுக்காக மேரி கியூரி யுரேனியம், பொலோனியம், ரேடியம் என்னும் தனிமங்களுடன் சோதனை செய்தார். இதன்விளைவாகக் கதிர்வீச்சின் வெளிப்பாட்டிற்கு ஆளாக்கப்பட்டதால் நோய்வாய்ப் பட்டு, 1934 ஆம் ஆண்டு ஜூலை நான்காம் நாள் இயற்கை எய்தினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *